பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள் - ஓர் ஆய்வு 63 கொண்டு கவசம் அமைத்திருக்கக் கூடும் என்ற உணர்வினைப் பெறுகின்றோம். பின்னர் ஒத்தாமணி (266) புலிப்பொறிப் போர்வையைத் தரல் உலோகத்தால் ஆன கவசத்தின்மேல் புவித் தோலினை மரபு கருதி அல்லது பகைவர்க்கு அச்சம் தரும் இயம்புகருதி அணிவித்திருக்கக் கூடும் என்ற எண்ணத்திற்கு ஏதுவாகின்றது. இறுக்கமாகக் கட்டப்பட்ட கச்சு, கச்சை போன்று, காலின் பாதுகாப்பினைக் கருதி அணிந்த கவசத்தினைக் கச்சம் என்றனர் (மதுரைக். 436). மெய்புதை அரணம் (பதி. 32:6) என்னும் அரணம் குறிக்கும் சொல்வினைக் காண, அரணாகப் பயன்பட்டமையின் இப்பெயர் பெற்றமை விளங்கு கீன்றது, உட்கட்டு என வழங்கப்படும் கோவணமும் (திருமந்திரம் -1635) அசணத்துடன் தொடர்புடையதாகும். இடையுடை யாகப் பயன்படினும் பாதுகாப்பு உணர்வு காரணமாக இதுவும் அரணம் என்ற 'சொல்வழக்கிளைப் பெறுகின்றது. 'தலையாய காப்பு" - கோ அரணம் என்றாகி, மக்கள் பேச்சு எலிமையில் கோவணமாகத் திரித்துவிட்டது. பெரியபுராணம் சொல்லினை மிகுதியாகக் கையாளுகின்றது. தீன் எனும் உடையினையும் இதனோடு இணைத்துச் சுட்டுவர் (பெரிய, அமர்நீதி. 3). எனவே இதுவும் கோவணம் போன்ற தொரு உடையாக இருக்கலாம். கீழ் உடை என்னும் சொல்லே இன் உடை என மருவியிருக்கலாம் என்னும் நிலையில் இக்கருத்து உறுதி பெறும். மெய்ம்மறை என்ற சொல்லும் காப்பு, அவசம் என்ற பொருளில் சங்க இலக்ல்யப் பயிற்சி பெறுகின்றது (பதி. 14:12). கருவியால் செய்யப்பட்டமை காரணமாக, கருவி, பூண் என்ற பெயர்களையும் கவசம் பெறுகின்றது (சீவக. 2214, 2265). சாலிகை (சீவக. 2217) என்ற சொல் விளக்கம் புலப்படவில்லை. கால்கவசத்தைக் கச்சம் என்று சங்க இலக்கியம் கட்ட, ஐக எனச் சிந்தாமணி (225) இதனைக் காட்டும். கம்பவில், கோதை (8558), புட்டில் (9191) என்பன கைக் அவசமாக, விரலுறையாகக் காட்டப்படுகின்றன. சீவக இந்தாமணியில், நச்னொர்க்கினியர் 'சந்தாகம்' (2235) என்று ஆரிற்குப் பொருள் உரைப்பர். இச்சொல் வட மொழிச் சொல் ஆகும்.” 49. வட சொற்றமிழ் அகரவரிசை - நீலாம்பிகை அம்மையார், பக்கம். 173.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/76&oldid=1498661" இலிருந்து மீள்விக்கப்பட்டது