பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு 26. ஈர்ங்கட்டு 65 கார் நாற்பது முதலில் உணர்த்தும் இவ்வுடை கார் காலத்தில் காவவர் உடுத்தியதாக அமைகின்றது. இளையரும் ஈர்ங்கட்டு அயரவுளை யணித்து" புல்லுண் கலிமாவும் பூட்டிய நல்லார் இளநலம் போலக் கவினி வளமுடையார் ஆக்கம் போற் பூத்தன காடு வேறு குறிப்புக்கள் இதனைக் குறித்துக் காணக் கூடவில்லை. (22) இச்சொல்லிற்கு ஈரத்திற்கு ஏற்ற கட்டு என்று பொருள் கூறுவர். 10 குளிர் காலத்திற்குரிய உடை என்பது அகராதியிலம்பும் பொருள். எனவே குளிருக்கு இறுக்கமாகக் கட்டுதல் காப்பானது என்ற உணர்வு கொண்டு, உடம்போடு நெருக்க மாகக் கட்டப்பட்ட உடையினை இது குறித்திருக்கலாம். 27. கோடி மடியினைப் போன்று, புத்தாடையைக் குறிக்கத் தமிழர் கொண்ட மற்றுமொரு சொல்லே கோடி ஆகும். தீதிநூற் காலம் முதல் பயிற்சி பெறும் தன்மையுடையது (.ஜசாரக்.44). சங்க காலத்தில் கோடி என்ற சொல் வழக்குக் காணப்படினும் ஆடை அல்லது புத்தாடை என்ற பொருள் இல்லை. இன்று கோடியாடைக்கு இருக்கும் மதிப்பு அன்றே உருவான ஒன்று, இன்பச் சடங்கில் பங்கு கொள்ளும் கோடி இறப்புச் சடங்கு வரை தொட்டுகின்றது. 'மந்திரக் கோடியுடுத்தி (நாச். திரு. 6:3) என மணத்தில் இடம் பெறும் கோடியின் தன்மை சிறந்த மேன்மை பொருந்திய உடையினைக் காட்டும். பஞ்சும் துகிலும் பூம்பட்டும் என (ரூனா. 1438) மன்னன் மரணச் சடங்கில் இடம் பெறுகின்றதைக் காண், தகுதியைப் பொறுத்து, கோடி இச்சடங்கில் வேறு படுகின்றதைக் காணலாம். திருமந்திரம் பொதுநிலையில் இறப்புச் சடங்கினைச் சொல்லும்போது, 'பருக்கோடி முடிப் பவரழ' (189) என இயம்பும் தன்மை ஏற்புடைத்தாகும். ஈண்டு 50. சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி. சேந்தமிழ்ச் செல்வி, ஜூன் 1978. 51. Tamil Lexicon, Vol. I, part-I,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/78&oldid=1498663" இலிருந்து மீள்விக்கப்பட்டது