பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 தமிழர் ஆடைகள் பகுக்கோடி-படுத்த இழைகளாலான ஆடை என்ற பொருளில் சாதாரண ஆடையாகிய கோடியே சுட்டப்படுகிறது. இன்று மரணமடைந்தவர்க்கு எடுத்துப் போடும் ஆடை யுடன், இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்க்கு எடுத்துக் கொடுக்கும் ஆடையினையும் கோடி எடுத்துப்போடல் என்றுரைப்பர். 28. கூறை கூறுபடுத்துதல் காரணமாகப் பெற்ற பெயர் கூறை, மலை யாளத்திலும் உடையைக் குறிக்கும் சொல்லாகத் திகழ் கின்றது."" இன்று கூறைச்சேலை, கூறைப்புடவை என்று மணமகள் தாலிகட்டும் சடங்கில் உடுத்தும் உடையினைக் குறித்து நிற் கின்றது இது. அதிகமான இலக்கியப் பயிற்சி பெறவில்லை யாயினும், சமுதாயத்தில் இதனைப் பற்றிய கணர்வு இருந்து கொண்டே வத்துள்ளது என்பதும், மாத்தர் எண்ணத்தில் சிறந்ததொரு இடத்தினைப் பெற்றுள்ளது என்பதும் இதனால் தெளிவு படுகின்றது. இம்மாற்றத்திற்குரிய காரணமாகச் சில எண்ணங்கள் எழு கீன்றன. இன்றைய கொரநாடு, கூவறநாடு என்பதனின்றும் மருவியது என்பது அறிஞர் எண்ணம். இதற்கு ஏற்றாற் போன்று கூறைநாடு எனச் சோழர் காலத்திலேயே வழங்கி 52. Ta : Kurai - Cloth, Clothes. Ma: Kura-a set of clothes, thick cloth. - A Dravidian Etymological Dictionary, No. 1603, 53. கூறை தெய்யும் தொழில் மிகுதியாக நடைபெற்ற நாடு. இப்பொழுது ஒரு சிற்றூராகக் கொரதாடு என்னும் பெயர் கொண்டு மாயவரத்தின் ஒருசார் அமைந்துள்ளது. ரளகும் பேரும் . ந. சஞ்சீவி, பக். 60, தையற்கலை கந்தரம் வெள்ளி விழா மலர், Koranad is a curruption of Kunai nadu (கூறைநாடு) & place where cloth is manufactured. Words and their Sigaificance - Dr, R, P. Sethupillai, p. 14.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/79&oldid=1498666" இலிருந்து மீள்விக்கப்பட்டது