பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு 67 விருக்கக் காண்கின்றோம். ஆகனே, அன்று கூறைநாடு உயர்ந்த ஆடைகளைத் தயாரிப்பதில் சிறந்திருக்கவேண்டும். அங்கிருந்து சிறப்பு நாட்களுக்கென்று, சிறப்பாக மணநாட்களுக்கு உடை களைப் பெற்ல் பெருமையஈசுக் கருதப்பட்டிருக்களாம். காலப் போக்கில் எப்புடைவையாயினும் மணப்பெண்ணின் உடை வினைக் கூறைப்புடைவை என்னும் மரபு உருவாகியிருக்கவாம் என்ற எண்ணங்களே அவை. கொரநாடு என்னும் இடம் பற்றிய உணர்வும், கூறைச்சேலைக்கு இன்று இருக்கக் கூடிய செல்வாக் குமே இவ்வெண்ணங்கட்த அடிப்படையே தவிர, தனிப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்வை. 29. புடைவை அடுத்தலால் ஆடை பெயர் பெற்றது போன்று, பக்கத்தில் வைக்கப்படுதலால் (புடை +வை) புடைவை எனப் பெயர் பெற் றிருக்கக் கூடும். புடைவை பற்றிய குறிப்புகள் உரையாசிரியர் கலின் உரையிலும், சாசனங்கள் வழியாகவுந்தான் தெரிய வரு இன்றதே தவிர இலக்கியத்தில் அதிக இடம்பெற்றதாகத் தெரிய வில்லை. இன்னா நாற்பது 'பாத்தில் புடைவையுடை யிள்ளா (2) என்று பகுப்பில்லாத உடையுடுத்தல் துன்பத்தைத் தரும் என்று இயம்புகின்றது. இரண்டு ஆடை உடுத்தல் வேண்டும், ஓர் ஆடை கூடாது என்னும் நிலையில் ஈண்டுப் புடைவை, இடை என்ற பொதுப்பொருளைத் தருகின்றது. திருநாவுக்கரசர். மெய்தருவான் நெறியடைவார் வெண்புடைவை மெய் குழ்ந்து சென்றடைந்தார் (61) எனப் பெரிய புராணம் காட்டும். இவண் போர்வை என்னும் பொருள் அமைகின்றது. உரையாசிரியர்கள் உடை (புறம். 136) கலிங்கம் (மது, 513) கோடி (சிவப் 11:45) போன்றவற்றிற்குப் புடைவை எனப் பொருள் உரைப்பர். 54. "சோழநாட்டின் ஒரு பகுதியாக இருந்த கூறைநாடு தீர்த்து மிரு பருத்தி பாடைகளைத் தயாரித்தது. அதனால் கூறை நாட்டுச் சேலைகள் சோழப் பேரரசு முழுவதும் பெரிதும் தேவைப்பட்டன. -முதலாம் இராசராசச் சோழன், க. த. திருநாவுக்கரசு, பக். 241.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/80&oldid=1498670" இலிருந்து மீள்விக்கப்பட்டது