பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 தமிழர் ஆடைகள் எனவே சொற்பொருள் ஆய்வுக்கு, மிகுதியான இலக்கியப் பயிற்சி அல்லது வழக்குத் தேவை என்பது விளக்கமற்ற "இச்சொற்க"ைநோக்கப் புலப்படுகிறது. 5. கால வளர்ச்சியில் மனித எண்ணங்கள் மாறல் இயற்கை. இத்துடன் அவர்கள் தொடர்பான அனைத்தும் மாறும் இயல்பின என்பதற்கொரு சான்றாகவும் இவ்வாடை வரலாறு அமைகின்றது. ஆடைபற்றிய சொல், பொருள் இரண்டின் வரலாற்றையும்- காண, (1) சொல் திரிதல் (சீலை) (2) சொல் வழக்கறுதல் (சிதார்) (3) பல்பொருளினின்றும் ஒரு பொருளைக் குறித்தல் (புடவை) (4) ஒரு பொருளினின்றும் பல்பொருளைக் குறித்தல் (ஆடை) (5) இழிபொருட்பேறு (கலிங்கம்) (6) சிறப்புப் பொருட்பேறு (கூறை), (7) பொருள் மாறுபாடு (அறுவை) என்ற நிலைகளில் இவை அடைத்த மாற்றங்கள் தெரிய வருகின்றன. கால வெள்ளத்தில் தாக்கம் எதுவும் அடையாமல் நிற்கும் சொற்களும் உள. சான்றாக உடை, கவசம் போன்றனவற்றைக் கூறலாம். அதிகமான செல்வாக்கு, எளிமை, சிறப்புக் காரணமாக இவை மக்கள் மனதில் அன்றுமுதல் இன்றுவரை எவ்விதச் சொற் பொருள் மாற்றத்தையும் அடையாது நிற்கின்றன எனல் பொருந்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/91&oldid=1498720" இலிருந்து மீள்விக்கப்பட்டது