பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39


'நால் வருணப் பிரிவு' நமக்கு மேற்றதே யென்று கொண்டபின் தமிழர் முதல் வருணத்தார்க்கே கற்குமுரிமையையும் விட்டுக் கைக்கட்டி நின்றனர் போலும். கல்வி யேற்பாடுகளில் இருந்த குறையையும் எதிர்த்துக் கம்பர், சேக்கிழார் செயங்கொண்டார், புகழேந்தி போன்ற பெரும்புலவர் இடைக் காலத்து விளங்கியமை தமிழர் சமூகக் கல்வியவாவின் உறுதியையே காட்டத் தக்க சான்று போலும்.

தமிழர் சமூகத்தில் மேற்படிகளில் நின்றோர் மட்டுமன்றிக் கீழ்ப்படியினருந்து தங்கொள்கைகளை யறிய வேண்டுமென்று ஜைன பெளத்த வைதிகர்கள் கருதிய காலத்தேதான் அக்கொள்கைகள் நிரம்பிய தமிழ் நூல்கள் வெளிவரலாயின.

காஞ்சியிலே கடிகையிருந்தது. கி.பி. நான்காம் நூற்றாண்டிலேயே அது விளங்கியமை தெரிகிறது. அங்கே பார்ப்பனரே வேத முதலியன கற்றனர்.

காவேரிப்பாக்கத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வைணவப் பிராமணர் படிப்புக்கு வசதியளிக்கும் மடமிருந்தது. பதினொன்றாம் நூற்றாண்டில் நாகைக் கடிகை ஆசிரியர் பலரையுடையதாய் மாணவர் பலருக்கு உண்டியுமுறையுளுமுதவி வேத சாத்திரக் கல்வியளித்தது. இந்நூற்றாண்டில் இம்முறையி லமைந்த படிப்பிடங்கள் எண்ணாயிரம், திருபுவனி, திருமுக்கூடல் முதலிய இடங்களிலும், அமைந்திருந்தன. திருவாடுதுறையில் சமஸ்கிருதத் திலுள்ள ஆயுர்வேத நூற் கல்வி கற்பிக்கும் பள்ளியொன்றிருந்தது.

தமிழ் மன்னர் இப்பள்ளிகட்கு இறையிலியாக நில முதவியதோடு வேறு பலவகையில் ஊக்கினர்.