பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இiபயனற்றனவுமாகும். இ க் க ரு த் து க்க கள ப் திண்துவே, மண்ணுெடு கிளியே; 'இல்லிக் குடிம் ஆடு எருமை நெய்யரி அன்னிர் தலை, இடிை. கடிைமானுக்கர்" என கன்னுரலில் கன்ருக கவின்றுள்ளார். மற்ருெரு வகை மற்ருெரு விதத்திலும் மாணவர்களே மூவகையாகப் பிரிக்கலாம். அவ்வித வகை என்ன ? கற்பூரத்தைப்போல் சொல்வியதும் பற்றிக்கொள்ளும் மாணவர்கள் முதல் மாணவர்கள். விறகைப்போல், சற்று முயன்று பற்றிக் கொள்ளும் மாணவர்கள் இடைமாணவர்கள். வாழைக் கட்டையைப்போல், எவ்வளவு முயன்றும் பற்ருத மாண வர்கள் கடைமாணவர்கள். மற்றும் பல்வித வகையாகக் கூறுவதுமுண்டு. எனவே, மாணவர் அனேவரும் முதல் மாணவர்க்குரிய இலக்கணத்தைப் பெற முயலவேண்டும். சிலர்க்கு அது முடியாவிடினும் இடைமானவர் கிலேயிலேயாவது கிற்றல் வேண்டும். கடைமாணவர் இலக்கணக்தைக கைக்கொள் எல் சிறிதும் கூடாது. மாணவர்கள். உணவினே காக்கின லும், மனத்திகன மூக்கிலுைம், இசையினைக் காதிலுைம், நாடகத்தினைக் கண்களிலுைம் சுவைத்துணர்ந்து நுகர்கின் ருர்களல்லவi அவற்றில் சிறிதாயினும் விட்டுக்கொடுக் கின்ருர்களா ? இல்லையே! அதுபோலவே, ஆசிரியர் கற்பிக் கும் பாடங்களையும் மன அறிவால் சுவைத்துணர்ந்து கற்க வேண்டுவது கடமை அல்லவா ? 118 கற்பித்தற் குரியவர் இங்கு, தனிப்பட்ட ஆசிரியர் ஒருவரையே எடுத்துக் கொள்வோமே. அவர் மாணவர் பலருக்குப் பல காரணம் பற்றிப் பாடங் கற்பிக்கலாம். தம் மகனுக்கும் தம் ஆசிரியர் மகனுக்கும் கடமை பற்றிப் பாடங் கற்பிக்க லாம். அரசன் மகனுக்கும், நிரம்பப் பொருள் தரும் செல் வன் மகனுக்கும் ஊதியம் (வருமானம்) பற்றிப் பாடங் கற்பிக்கலாம். ஒருவகைப் பொருள் உ தவியும் செய்யாது தமக்குக் குற்றேவல் செய்து வழிபடும் ஓர் ஏழை மாணவ னுக்கும் இரங்கி அன்பு பற்றிப் பாடங் தற்பிக்கலாம் மேற்கூறப்பட்ட தொடர்பொன் றும் இல்லாவிடினும் தரம கற்பிக்கும் பாடங்களே விரைந்து பற்றிச் சுவைத்துணர்கது கற்கும் முதல் மாணவனுக்குத் தாமே (ஆசிரியரே) பொரு ளுதவி செய்தும் பர்டங் கற்பிக்கலாம். இத் திறமை வாய்ந்த முதல்மாணவர்க்குப் பாடங்கற்பிப்பதில் ஆசிரியர் கட்கு ஒரு தனிப்பட்ட ஆவலும் கவையும் உண்டு. ஆக லின். அம் மாணவரைத் தேடிப் பிடித்தும் பாடங் கற்பிப் பார்கள். அதல்ை, அவ்வாசிரியர்களின் கல்வியும் மேன் மேலும் வளர்ச்சியடையும். இவ்விதமாக இன்னின்னுர்த் குப் பாடங் கற்பிக்கலாம் என்கிருர் பவனங்தி முனிவர். இதனே. அவரது கன்னூலிலுள்ள, 'தன்மகன் ஆசான்மக்னே மன்மகன் பொருள் தனி கொடுப்போன் வழிபடுவோே உரைகோ ளாளற்கு உரைப்பது நூலே' என்னும் குத்திரத்தால் அறியலாம். மன்மகன் என்ருல் அரசன் மகன். உரைகோளாளன் என்பதற்கு, ஆசிரியர் உரைக்கும் உரையை விரைவில் சுவைத்துண ர்ந்துகொள்ளும் முதல் மாணவன் என்பது பொருள்.