பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

அக்காலை,சேரநாட்டு அரியணையில் அமர்ந்திருந்தோன். அத்தகையான் தன் படைத் தலைவனாயின் தன் அரசுக்குப் பெரிய துணையாம் என்று கருதினான். மேலும், தன் நாட்டைச் சேர்ந்த ஒரு மலையரணில், அதுவும் தன் நாட்டு எல்லைக்கு அண்மையில் உள்ள ஒரு மலையில் ஆட்சி மேற்கொண்டிருப்பவன் துணை தனக்கு நனிமிக இன்றியமையாதது என்பதையும் உணர்ந்தான். அதனால் அவனை அழைத்துத் தன் படைத் தலைவனாக்கிப் பெருமை செய்தான். பிட்டங் கொற்றனும், ஒருபேரரசன் படையில் பணிபுரிவது, தன் பேராண்மையைப் பலநாட்டு வீரர்க்கும் காட்டிப் புகழ் பெறுவதற்கு வாய்ப்பளிக்கும் என எண்ணி, அப்பணியை விருப்போடு ஏற்றுக் கொண்டான்.

சேரவேந்தன் படைத்தலைவனாய்ச் சிறந்த பணி புரிந்து வெற்றிப் புகழ் விளங்க வாழ்ந்திருந்த பிட்டங் கொற்றன் பால்,கொடைக்குணமும் குறைவறக் குடி கொண்டிருந்தது. பாடிப் பிழைக்கும் பாணர்க்கும், பொருநர்க்கும், பிறகூத்தர்க்கும் பிட்டங்கொற்றன் வாரி வாரிவழங்கினான். அவன்பால் பொருள் பெற விரும்புவோர், ஒருநாள் சென்றாலும் தருவான். ஓரிரு நாட்கள் கழித்துக் கழித்துப் பலமுறை சென்றாலும் தருவான். அவ்வாறில்லாமல் நாள்தோறும் சென்றாலும் தருவான். "உனக்கு முன்னரே கொடுத்து விட்டேன். இனித் தாரேன்" என்ன்று மறுத்துக் கூறிக் கொடாது போக்கான். எத்தனை முறை சென்றாலும், இல்லை என்னாது கொடுப்பான். அது மட்டுமன்று,அவனுடைய மாட்டுத் தொழுவில் வகைவகையான மாடுகள் இருக்கும். செல்பவர், உன் மாடுகளைத் தொழுவோடே தருக. என்று கேட்பராயின், அவனும் அப்படியே அளித்து அனுப்புவன். அவன் நாட்டு நெற்போர்க்களங்களில், காணும் இடம் எங்கும், நெல் மலைபோல் குவிந்து. கிடக்கும். வருவோர், "கொற்ற நெற்குவியல்களுள்"