பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

யுடைய காலமாம்.அக்கோடைக்காலம், குறுகி முடிவுற்றுவிடாது, நனிமிக நீண்டு செல்கிறது. கோடை வெய்யிலின் கொடுமையால், வெம்பும் மலைகள், அவ்வெப்பம் மேலும் மேலும் மிகுவதால் வெடித்துப் பொடிபடுகின்றன. காட்டு மரங்கள் தீப்பற்றி எரிந்து கரியாகின்றன; பெரிய பெரிய நீர் நிலைகளெல்லாம் பைதறக் காய்ந்து தூள்பறக் கின்றன. கோடையின் கொடுமை பொறாது, மாவும் மாக்களும் கூட்டங்கூட்டமாய் மாள்கின்றன. மக்கள் மனம் கலங்கி நிற்கிறனர். இந்நிலையில் ஒருநாள், வானம் திடுமென இருண்டு இடித்து மின்னி, உலகத் தையே அடித்துச் செல்வது போலும் பெருமழை. பெய்யக் கண்டால், மக்கள் உள்ளம் மகிழ்ச்சியால் எவ்வளவு துள்ளும் என்பதை உன் உள்ளம் அறியும். அவ்வளவு மகிழ்ச்சி கொள்ளுகிறார்கள், இன்று சோணாட்டு மக்கள். நின் தந்தை உயிரோடிருந்திருந் தால், சோணாட்டிற்கு இவ்வவலநிலை வந்திராது. அவன் இறந்து பிறவாப் பெருநிலை பெற்றுவிட்டான். சோணாடு அல்லல் உற்றுப் போயிற்று. அதை நீ மாற்றி மகிழ்ச்சியை அளித்தாய். வாழ்க உன் கொற்றம்! வளர்க உன் குடிப் புகழ்!" என வாழ்த்துரை வழங்கி வானளாவப் புகழ்ந்து பாடினார்.

"அரசு இழந்திருந்த அல்லற்காலை,
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு. கரைபொருது
இரங்குபுனல் நெரிதரும் மிகுபெரும் காவிரி
மல்லல் நன்னாட்டு அல்லல்தீரப்,
பொய்யர் நாவின் கபிலன் பாடிய
மைஅணி நெடுவரை யாங்கண், ஒய்யெனச்
செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட
எள்ளது சிறப்பின் முள்ளூர் மீமிசை
அருவிழி இருந்த பெருவிறல் வளவன்
மதியருள் வெண்குடை காட்டி, அக்குடை
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படும்!