பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தமிழர் தளபதிகள்

தோற்றுவாய்

உலகியல் அமைப்பு என்றும் ஒன்றாகவே இருந்ததில்லை. காலங்தோறும் அது மாறிக்கொண்டே வந்து ளது. என்ருலும், உலக மக்களின் அடிப்படைப் பண்பு எக்காலத்தும் ஒரு படித்தாகவே உளது. இன்றைய மக்கள் உணவு முறையும், கற்கால மக்கள் உணவு முறையும் மலேயும் மடுவும்போல் மாறுபடும் என்றாலும், உணவு உண்டால் அன்றி உயிர்வாழ்தல் இயலாது என்ற அடிப்படைப் பண்பில் இரு காலத்தவரும் ஒருமைப்பாடுடையவரே. அது கற்கால மக்கள் வாழ்ந்த மலைக்குகைக்கும், இக்கால மக்களின் வாழ் இடமாம் மாடமாளிகைக்கும் இடையில் எத்துணேயோ வேறுபாடு உளது என்றாலும், இருக்க ஓர் இடம் தேவை என்பதில் அவ்விருகால கிலேக்கும் இடையில் சிறு வேறுபாடு தானும் இடம்பெறவில்லை. கற்கால மனிதன் மரவுரியும் மாவின் தோலும் உடுத்தான். இக்கால மனிதன் பால்துரை கிகர்க்கும் மெல்லிய துாய ஆடை அணிகின்ருன் என்ருலும் உடலே மறைக்க ஒன்று தேவை என்ற உலகியல், அன்றும் இன்றும் ஒன்ருகவே உளது. அதைப்போலவே, அக்கால மக்களுக்கு ஆசை ஊட்டிய பொருள்களும், இக்கால மக்களுக்கு ஆசை ஊட்டும் பொருள்களும் கம்மிடையே’ பல்வகை யானும் வேறுபடுகின்றன என்றாலும், ஆசைக்கு அடிமைப்பட்டவரே அவர்களும் இவர்களும் என்பதிலும், அவ்விருவர்தம் ஆசைகளும், மண், பொன், பெண், புகழ் ஆகிய இவற்றையே அடிப்படையாகக் கொண்டு எழுந்தன, எழுகின்றன என்பதிலும், இவ்வாசைகள் காரணமாகப் போர் மேற்கொள்வதில்