பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அக்காலமக்களும் இக்கால மக்களும் ஒத்து நிற்கின்னர் என்பதிலும் ஒருமைப்பாட்டினையே காண்கிறோம்.

உணவும் உடையும் உறையுளும் தேவை என்பதை உணர்ந்து, அவற்றை அடைதற்காகவென்றே போர்மேற் கொள்வதில் இருகால மக்களும் ஒத்து நிற்கின்றனர். உணவும் உடையும் உறையுளும் எக்கால மக்களுக்கும் இன்றயமையாதனவாகவே, அவற்றை அடைய மேற்கொள்ளும் போரும் இருகால மக்கட்கும் இன்றியமையாத தாகிவிட்டது. அக்கால மக்கள் மேற்கொண்ட போர் முறைக்கும் இக்கால மக்கள் மேற்கொள்ளும் போர்முறைக்கும் பெரிதும் வேறுபாடுளது என்பது உண்மையே யென்றாலும், உணவும் உடையும் உறையுளும் தேவை என்பதை உணர்ந்து, அவ்வுணர்வு வரப் பெற்றமையால் மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை, புகழ்ஆசை ஆகிய ஆசைகட்கு அடிமையாகி, அது காரணத்தால் போர் மேற்கொள்வது இருவர்க்கும் இன்றியமையாததாகி விட்டது என்பதில் ஒருமைப்பாடே நிலவுகிறது.

உலகியல் நிகழ்ச்சியில், போர் ஓர் இன்றியமையாத உறுப்பு என்பது உண்மையாகவே, அப்போர் புரியும் படை, உலகியற் பொருள்களுள் தலைசிறந்த தகுதிப்பாடுடையதாகிவிட்டது. உடலுக்கு உறுதுணே புரியும் உறுப்புகளே போல், உலகாளும் அரசர்க்கு உறுதுணைபுரியும் உறுப்புக்கள் ஆறனுள், படை தலைமைப்பாடுடையது என்ற இவ்வுண்மையை உணர்ந்தமையாலன்றே,"படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண், ஆறும் உடையான் அரசருள் ஏறு” என்ற குறளில், படைக்கு முதலிடம் தந்து போற்றி யுள்ளார் வள்ளுவப் பெருந்தகையார். காட்டின் கல்லாட்சிக்கு ;நற்றுணை புரிவது படையே என்பதை உணர்ந்துள்ளமையால், வல்லரசும் கல்லரசும் ஆகிய இன்றைய உலக அரசுகள் அனைத்தும் அரசியற்