பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
х

டாக்டர் ஐ.டி. கார்னெலியஸ் மற்றும் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் போன்ற வரலாற்றுப் பேராசிரியர்களால், இதே வாதம் நடுநிலக்கடல் நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர் திராவிடர் என்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏர் கொண்டு உழுதலும், வரப்பு கட்டிப் பயிரிடுதலும் முதன் முதலில், மெசபடோமியாவிலும், பாலஸ்தீனத்திலும்தான், மேற்கொள்ளப்பட்டு பின்னர், அவர்களால் தென்னிந்தியாவில் புகுத்தப்பட்டது என்பது அவ் வரலாற்று ஆசிரியர்கள் கருத்து. திருவாளர் டாக்டர் ஸ்பீச் அவர்கள் கூற்று, திராவிடர்கள் மேற்கு ஆசியாவிலிருந்து அலை அலையாக வந்து, தென்னிந்தியாவில் இறந்தார் உடலை அடக்கம் செய்யும் பாரக்கல் நினைவுச்சின்னப் பண்பாட்டினை உருவாக்கினர் என்பது, திருவாளர் “ஹைமென்தார்ப்” (Huimendarf) அவர்கள் கூற்று, திராவிடர்தாம், தொல்பழங்கால பாரக்கல் நினைவுச் சின்னங்களை எழுப்பியவர், தென்னிந்தியாவிலேயே வாழ்ந்தவர் என்பது லெமூரியாக் கண்டம் என்ற கொள்கையும், திராவிடர்தாம் இம்மண்ணுக்குரிய மக்களாவர் என்ற கொள்கையும், இயற்கைக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாதன அறிவொடு படாதன எனக் கருதுகின்றனர். திருவாளர்கள், டாக்டர் ஐ.டி. கார்னெலியஸ், மற்றும் பேராசிரியர் நீலகண்டசாஸ்திரியார் ஆகியோர். ஆனால், பின்லாந்து நாட்டு வரலாற்றுப் பேராசிரியர்களின் அண்மைக்கால ஆய்வுகள் தந்த விளக்கத்தில், திராவிடரின் தோற்றம் பற்றிய ஆய்வு புதிய நிலையை அடைந்துளது. திருவாளர் தீக்ஷிதர் அவர்களின் இக்கருத்து, இத்துறையில், புதிய ஆய்வுகளைத் தாண்டி விளக்க முடியாத இப்புதிர் மீது மேலும் விளக்க வொளியினை உறுதியாக வீசும். ஆரியர் திராவிடர் என்பன போலும் இனம் எதுவும் இல்லை; இந்தியா மீது ஆரியப்படையெடுப்போ, திராவிடர் படையெடுப்போ இல்லை; பழங்கற்காலப் பண்பாட்டிலிருந்து புதிய கற்காலப் பண்பாட்டிற்கும், புதிய கற்காலப்