பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

109


அருள் தந்தை ஹீராஸ் அவர்கள், எழுதிய “மேகனின் அரசு” (Kingdom of Megan) என்ற கட்டுரையில், இக்கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

3) இரு கடல்களை இணைக்கும் நீண்டு குறுகிய சூயஸ் நிலப்பகுதியை வெட்ட எடுத்த முதல் முயற்சி.

நைல் நதிக்கும், செங்கடலுக்கும் இடையிலான, நீண்ட, இடர்மிகு, பாலைவனப் பிரயாணத்தின் கொடுமை, நீண்ட காலமாகத் தொடர்ந்து உணரப்பட்டது. வாணிகம் பெருகப் பெருக, இவ்விரு கடல் வழிகளையும், ஒரு கால்வாய் மூலம் இணைக்க வேண்டியதன் இன்றியமையாமை, மிகமிகத் தெளிவாகிவிட்டது. கி.மு. இருபதாவது நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஸெஸொத்ரிஸ்’ நாடு (Sesostris) இத்துறையில் முதல் முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. எகிப்திய மன்னன் நெக்கோ (Necho) வும், கி.மு. 521 முதல் 486 வரை ஆண்ட பர்ஷிய மன்னன் டாரியஸ்ஸும் (Darius), தங்கள் கருத்தாழ்ந்த கவனத்தைத் தீர்வு காணமாட்டா இத்திட்டத்தில் திருப்பினர். இன்றைய சூயஸ் துறைமுகமாம் அன்றைய “அர்சினோஇ” (Arsince) துறை முகத்தைக் கண்டமைக்காம் பெருமையைச் சிற்றாசியாவைச் சேர்ந்த பிலடெல்பஸ் (Philadelphus) ஸில், கி.மு. 285 முதல் 246 வரை வாழ்ந்திருந்த கணிதம் மற்றும் சில நூல் வல்ல தாலமி (P.Tolemy) அவர்களின் மேதகவுக்கே கொடுக்கப்படவேண்டும். ஆனால், வளைகுடாவில், கடல் பயணத்தின் இடர்ப்படு நிலைமை, இதை உடனடியாக அல்லது காலப்போக்கில் கைவிட வேண்டி நேர்ந்தது. ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் சூயஸின் தவிர்க்க முடியாத மிகப் பெரிய நன்மை, பிரான்ஸ் நாட்டு அரசியல்வாதியான டி. லெஸ்லெப்ஸ் (De Lesseps) அவர்கள் மனத்தில் பட்டது. அவர், அதை வெற்றியுற முடித்து வைத்தார். வணிகர்கள், தங்கள் வாணிகப் பொதிகளை யெலனா (Aelana),