பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

115


கிடைக்க, (மதுரை மாவட்டத்தில் மூன்று கண்டுபிடிப்பே நிகழ்ந்தன. கோவை மாவட்டத்தில் ஒன்று கூட இல்லை) அதற்கு நேர்மாறாக, வடமாவட்டங்களில் பெருமளவில் காணக் கிடைப்பது, பொற்காசுகள் கொடுத்து வாங்கும் ஆடம்பரப் பொருள்களின் தேவை ஓரளவு குறைந்தமையும், பண்டமாற்று மூலம் வாங்கப்படும் பருத்தியாலான பொருட்கள் போலும், இன்றியமையாத் தேவைப் பொருட்களை ஆர்வத்தோடு திரட்டும் புதிய வாணிகத் தூண்டுதலுமே காரணமாம் என்றும், வாணிக நிலையிலான மொத்த விளைவுகளும், கி.பி. 64-ல் நேர்ந்த கொடிய நீ விபத்து, கிலாடியஸ், வழிப் பேரரசின் வீழ்ச்சி. வெஸ்பாஸியனின் சிக்கன எடுத்துக்காட்டு. கி.பி. 81 முதல் 96 வரை ஆண்ட டோமிட்டியன் (Domitian) கொடுமை, அடுத்து வந்த பேரரசர்கள், செலவினத்தில் காட்டிய நிதானம் ஆகியவை. துணை செய்ய ஏற்பட்ட வாணிக வீழ்ச்சியையே காட்டுகிறது என்று கூறியுள்ளார். நறுமணப் பொருள்கள், விலை உயர்ந்த நவமணிக்கற்கள் ஆகியவற்றில் இந்தியாவோடு கொண்டிருந்த வாணிகம். நீரோ மன்னன் இறப்போடு பெரும்பாலும் முடிவுற்று விட்டது என்ற சூவெல் அவர்களின் முடிவு முழுவதும் உண்மையானதன்று. உண்மையைக் கூறுவதானால், திருவாளர் வார்மிங்டன் காட்டுவதுபோல் நீரோவுக்குப் பிற்பட்ட காலத்து நாணயங்களின் கண்டுபிடிப்பு குறிப்பிட்டுக் காட்டுவதுபோல், இருமடங்கு வளர்ச்சி இருந்தது. முதலாவது தாலமி அவர்களின் நிலஇயல் ஆய்வு நூல், நமக்கு அறிவுறுத்துமாறு, உரோமானிய வணிகர்கள், கன்னியாகுமரியைச் சுற்றிக்கொண்டு, கிழக்குக் கரை வரை சென்று வந்தமையினைச் சுட்டிக் காட்டும். தென்னிந்திய தீபகற்பத்தின் கிழக்குக் கரை வாணிக வளர்ச்சி கடப்பா மாவட்டம் வினுகொண்டா கோட்டை மற்றும் அதிரல் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து காணுமாறு அவர்கள் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களுக்கும், ஏனைய அரசு