பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தமிழர் தோற்றமும் பரவலும்


நாடுகளுக்கும் ஊடுருவிச் சென்றிருந்தனர். இரண்டாவதாகச் சேர நாட்டின் வடமேற்குவரை, வெள்ளி நாணயங்கள் இல்லாமை கொண்டுவந்த வெள்ளி நாணயங்கள் அனைத்தும், பொன் நாணயங்களைச் செய்யாத ஆந்திரர்களாலும் சாகர்களாலும் உருக்கப்பட்டு, மறுவலும் வடித்து வழக்காற்றில் விடப்பட்டது என்ற உண்மையால் விளக்கப்படும். திருவாளர் வார்மிங்டன் பின்வருமாறு கூறுகிறார்: “இதுவும், தமிழ்நாடுகளில் உரோம நாணயங்களின் இடை நிறுத்தமும், பிற வரலாற்று மூலங்களிலிருந்து நாம் உய்த்துணரும் ஒரு மனப் போக்கைப் பிரதிபலிக்கும். முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இரண்டாம் நூற்றாண்டிலும், நறுமண்ப் பொருள்கள், விலையுயர்ந்த நவமணிக்கற்கள் போன்ற பொருட்களுக்குக் குறைவிலாத் தேவை இருந்தது. ஆனால், அதே காலத்தில், இந்தியப் பொருள்களையும், உரோமானியப்பொருள்களையும் தமிழ்நாட்டில் பண்ட மாற்றிக்கொள்வது தடையின்றித் தொடர்வதும், தமிழ்நாட்டுக்கு அப்பாலும், கிழக்கு நாடுகளுக்கு உரோமானியர்களின் கடற் பிரயாணம் தொடர்வதும் ஒருபால் இருக்க, தமிழ்நாட்டிலிருந்து சில வணிகங்களைத் திருவாளர் தாலமி காட்டியவாறு, சிம்யல்லா (Simylla) போலும் நகரங்கள் வளர்ச்சி பெறக் காரணமாக, இந்தியாவின் வடமேற்கு மாவட்டங்களுக்கு மாற்றும் போக்கு இருந்தது. ஆனால், தமிழர்கள், கிரேக்கர்கள், சிரியன்கள், அராபியர்கள், பர்ஷியர்கள், சாகர்கள், ஆந்திரர்கள், குஷான்கள் ஆகியோரிடையே பல்வேறு வாணிக நிலையங்களைக் காணும் வகையில், தம் பண்டப் பொருள்களைத் தங்களால் இயன்ற அளவு மேற்குக் கடற்கரை வரைக்கும் அனுப்பி வைக்கத் தொடங்கிவிட்டனர். இலங்கையும் கூட, அதே நடைமுறையை மேற்கொண்டது. ஆனால், உரோமானியர் அங்கு எப்போதும் சென்றது இல்லை. ஏனைய இரு தமிழ் அரசர் நாடுகளைக் காட்டிலும், சேர நாடு, மிக்க வளம்