பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

தமிழர் தோற்றமும் பரவலும்


பாபிலோனியக் கற்பனைப் பழங்கதைகளில், அனு (Anu) என்கிற வான்கடவுளோடு, “இஎ” (Ea) என்கிற, நிலத்துக்கு அடியில் உள்ள நீர்க்கடவுளோடும் இணைத்து வழங்கப்படும் “என்லில்” (Enli) என்ற நிலத்தெய்வம் இருந்தது. மனித முகம், நீண்ட முடி, தாடியோடு கூடிய, கடவுள் போலும் வடிவங்கள், களிமண்ணால் ஆன சிலைகள் உள்ளன. அவனுக்கு “நின்லில்” (Nihil) என்னும் பெயருடைய உயிர்களைப் பெற்றுப் பேணும் பெண் தெய்வமாகிய மனைவியும் இருந்தாள். நின்லில் என்பது ‘என்லில்’ என்பதன் பெண்பாற் பெயராம். திருவாளர் ஜே. ஜி. ப்ரொஜர் (J.G. Frazer) அவர்களின் “இயற்கை வழிபாடு” (Worship of Nature) பக்கம்:348 என்ற நூலைக் காண்க.

பண்டைய எகிப்தியரிடையே, வானாம் பெண் தெய்வத்தை மணந்த ஆண் தெய்வமாக, நிலம் உருவகிக்கப்பட்டது. அவன் ‘ஸெப்’ (Seb) அல்லது ‘கெப்’ (Kab) எனப் பெயர் இடப்பட்டான். அவன் மனைவி, “நட்” (Nut) எனப்பட்டாள். அவன் நில மூலத்தையும் மரம் செடிகொடிகள் வளரும், நில மேல்புறத்தையும், உருவகித்தான். அவன் கிரேக்கர்களால், உரோமர்களின் வேளாண்மைத் தெய்வமாகிய “க்ரோனஸ்” (Ronus) ஆக அடையாளம் காணப்பட்டான். அவனுடைய வழிபாட்டிற்கு அடையாளம் காணப்பட்டான். அவனுடைய வழிபாட்டிற்கு உரிய இடம், சிரியாவில் டமாஸ்கஸ் நகருக்கு அண்மையில் இருந்த நனிமிகப் பழைய நகரமாகிய ‘ஹெலியோசோலிஸ்’ (Heliosolis) என்பதாம். அதாவது அவனும் அவன் மனைவியும் பெரியதொரு முட்டை இட்டு அடைகாக்க, அதை உடைத்துக்கொண்டு வெளிவந்த சூரியக் கடவுளின் நகராம்.

சீனர்கள், நிலத்தைத் தாய்க்கடவுளாக உருவகித்து வழிபட்டனர். நிலத்தின் சரிநகரான வானைத், தந்தை கடவுள் என்ற உரிமையில் வழிபட்டனர். நிலமாம் தாய்த்தெய்வ வழிபாடு