பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தமிழர் தோற்றமும் பரவலும்



40. ஹொலோபிரெஸ்டிக் (Holophrastic) ஒரு தொடர் அல்லது வாக்கியத்தால் கூறப்படும் ஒரு பொருளை, ஒரே சொல்லில் விளக்குவது.

41. ஹொமொஜீனியஸ் (Homogeneous) ஒரே மனிதகுலத்தைச் சேர்ந்த...

42. ஒடிஸி (Odyssey) கிரேக்கப் பெரும் புலவர் ஹோமர் இயற்றியதாகக் கூறப்படும் ஒரு பழங்கதை.

43. ஒப்ஹிடெஸ் (Ophites) மனித அழிவைக் கொண்டு வந்துவிட்ட நாகப்பாம்பினை வழிபட்ட பண்டைக் கிறித்துவ சமயத்தவர்.

44. ஒபிர் (Ophir) விவிலிய நூலில் கூறப்பட்டிருக்கும் பொன்வளம் கொழிக்கும் நாடு. சிலர், பம்பாய்க் கடற்கரையைச் சேர்ந்த பழைய துறைமுகமாகிய சோபரா (Sopara) என்றும், சிலர், சிந்துநதி கடலோடு கலக்குமிடத்தில் உள்ள சமஸ்கிருத அப்ஹிர் (Abhira) என்றும் சிலர் அரேபியாவில் எங்கோ உள்ள ஓர் இடம் என்றும் கூறுவர்.

45. ஓனெஸ் (Oannes) பாரசீக வளைகுடா வரை நீந்தி வந்ததாகவும், தன்னோடு நாகரீகத்தையும் கொண்டு வந்ததாகவும் கூறப்படும் கற்பனை மனித மீன்.

46. ஹெளஸ்ஸா (Haussa) ஆப்பிரிக்காவில் உள்ள நைசீரியா மற்றும் சூடான் நாட்டில் வாழும் நீக்கிரோக்கள், மற்றும் அவர்களின் மொழி.

47. ஹரியன்கள் (Hurrians) இன்றைய சிற்றாசியாவாம் பழைய கிழக்கு அனடோலியாவுக்கும், யூபிரடெஸ், டைகரஸ் ஆறுகளுக்கு இடைப்பட்ட நாடாம் வடக்கு மெலபடோமியா வுக்கும் இடையில் அர்மீனிய மலையத்தே தோன்றிய