பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடம் மற்றும் பிற பெயர் விளக்கம்

169



122. ப்யூனன் (Funan) இன்றைய தாய்லாந்து, அன்றைய சயாம் வளைகுடாவின் கரையில் உள்ள ஒரு நகரம்.

123. "ப்யூம்" (Fayum) எகிப்தின் வடக்கு மாநிலம்.

124. ப்ரான்சி பொதா (Branchi poda) பொதா தட்டையான இலை போலும் உறுப்புகளைக் கொண்ட நண்டு நத்தை போலும் கெட்டியான மேல் தோடுகளைக் கொண்ட, கடல் வாழ் உயிரினங்களோடு உறவுடைய உயிரின வகை.

125. பதான்ஸ் (Pathans) ஆப்கானிஸ்தானத்து முஸ்லிம் இனம்.

126. பஹரேயின் (Bahrein) பாரசீக வளைகுடாவில் உள்ள தீவுக் கூட்டம்.

127. பாரஒக் (Pharoh) எகிப்தியத் தொல்பழக்கால மன்னர்களின் பட்டப்பெயர்.

128. பிலாஸ்கி (அ) பிலாஸ்கியன் (Pilasgi or Pilasgian) கிரேக்கம் மற்றும் அதன் அண்டை நாடுகளில் வாழ்ந்தவராகக் கருதப்படும், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கி.மு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த, கிரேக்க மொழியல்லாத மொழி பேசிய ஒரு மக்கள் இனம்.

129. பாலியோலித்திக் (Paleolithic) பழங் கற்காலத் தொடக்க காலம். புதிய கற்காலம் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட காலம்.

130. பலுஜிஸ்தான் (Baluchistan) மேற்கு இந்தியாவில் உள்ள ஒரு நாடு.

131. பஹாலிக் கல்ட் (Phallic Cult) படைப்பு ஆற்றல் சின்னமாக, இலிங்க வடிவை வழிபடும் வழிபாட்டு நெறி.