பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தமிழர் தோற்றமும் பரவலும்


சிறியவும், பெரியவுமான பல இருந்தன. பெரியவை, நீண்ட வடிவில், ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட இணையான கால்களைக் கொண்டவை. எல்லாவற்றிலும், சிறியன நாற்சதுர வடிவில் நான்கு கால்களை உடையன. மேலும், மூன்று கால்களையும், நான்கு கால்களையும் உடைய தாழிகளும் இருந்தன. அவற்றுள் மூன்று கால்களை உடைய தாழிகள், வட ஆர்க்காடு மாவட்டத்தில் தனிச்சிறப்புடையன.

3. தோண்டி எடுக்கப்பட்ட குடவரைக் கல்லறைகள் குடக்கல்லு, அல்லது குடைவடிவிலான கல்லால் ஆன கல்லறைகள். வட்டவடிவான நான்கு அடி ஆழம், 6 முதல் 8 அடி சுற்றளவு உள்ளதாக, செங்குத்தாகத் தோண்டப்பட்ட கல்லறை இது. ஒரு கல் அதை மூடி இருக்கும். செங்குத்தான இருகல்லும், அவற்றின் மீது தட்டையான கல்லும் கொண்ட, வரலாற்றுக் காலத்துக்கு முந்திய கல்லறை எனும் பொருளில் “டால்மென்” (Dolmen) என்றும் அழைக்கப்படும். இக்குடவரைக் கல்லறைகளுக்கும், பெரிய தாழிகளுக்கும் இடையில், ஒரு தொடர்பு இருப்பதை உணரலாம்.

4 மலபார் “தொளி” என்பதனோடு தொடர்புடைய, தோண்டிய அறையினவாய புதை குழிகள் பாறைகளில் நேர்மூலையினவாக வெட்டப்பட்டு, குடை வடிவான கூரையின், மையத்தே திறந்திருக்கும். ஒரு பெரிய கல் மூடியாக இருக்கும். இவ்வகையில் வியப்பிற்கு உரியது என்னவென்றால், “தொளி” என்ற இந்தப் பெயர். இத்தாலிநாட்டுக் கிரீட்டில் உள்ள சல்லறைக் குழிகளுக்கும் இட்டு வழங்கப்பெறுகிறது என்பது. கிரீட்டில் அது. கருங்கல் கடகால் மீது செங்கல்லால் கட்டப்பெற்ற தேன் கூடு வடிவமுள்ள கல்லறை. கிரீட் மன்னன் மினோயன் (Minoan) பெயரால் வழங்கும், கி.மு. 3000க்கு 1500க்கும் இடைப்பட்ட காலமாம் தொல்பழங்காலத்தைச் சேர்ந்தனவாகிய முத்திரைகள், பன்னிறப் பூவேலை செதுக்கு வேலை அமைந்த குவளைகள்,