பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முடிவுரை

இக்கட்டுரையை முடிக்குமுன், இன்றும் நம்மிடையே உள்ள மலைகளிலும், காடுகளிலும் வாழும் பழங்குடியினராம், தென்னிந்தியாவின் தொல்பெருங்கால மக்கள் வழியினரிடையே, நீகிரோ இனத்துப் பண்புக்கூறு இடங்கொண்டிருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்பதைக் கூறவிரும்புகின்றேன். கல்லையே தன் வாழ்வும், உயிருமாகக் கொண்ட பழங்கற்கால மனிதனின், இறவா முன்னோர்கள்.அவர்கள் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிற்றாசியா, மற்றும் ஏஷியன் பள்ளத்தாக்கு நாடுகளிலிருந்து மக்கள் குடிபெயர்ந்தனர் என்ற கொள்கையை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தொல்பெருங்காலத்தில் இருந்தே, ஓரிடத்திலிருந்து ஓரிடத்திற்கு நாகரீகப் புடைபெயர்ச்சி உண்மையில், நம்பிக்கை உள்ளவன் நான். அவர்களில் சிலர் தென் இந்தியாவின் பல இடங்களில் இடங்கொண்டுவிட்டனர் என்பதும், காலப்போக்கில், அந்நாட்டுப் பழங்குடியினரோடு ஒன்றுகலந்துவிட்டனர் என்பதும் இயலக் கூடியதே. இவ்வாறு குடிபெயர்ந்து வந்தவர், திராவிடர், என்ற கொள்கையைச் சரியானதுதானா? என நான் கேள்வி எழுப்புகின்றேன். அதாவது மறுக்கின்றேன். திராவிட முன்னோர், திராவிடர்க்கு முந்திய பழங்குடியினர் என்பன எல்லாம். 20ஆம் நூற்றாண்டின் கற்பனைகள். தென்னிந்தியத் தொல்பொருள் ஆய்வாளர்களோ, வரலாற்றுப் பேராசிரியர்களோ கடல்கோள், எரிமலை, மற்றும் வேறு காரணங்களால் மக்களும், நாகரீகங்களும் இடம் பெயர்ந்தனர் என்பதற்கான பொருந்தும், ஏற்கக் கூடிய