பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தமிழர் தோற்றமும் பரவலும்


வெள்ளாளர் மற்றும் காராளர் போலும் உழவர் குலத்தவர்களாலும், ஆடு மாடுகளைக் காக்கும் ஆயர் போலும், கால்நடை மேய்ப்பவர்களாலும், வேறு வகை நாகரீகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழகத்தில் பெருமணல் பரந்த பெருநிலம் இன்மையால், பாலை நிலத்து மக்கள் குறிஞ்சி, அதாவது மலைநாட்டுப் பழங்குடியினரோடு ஒன்று கலந்துவிட்டனர். வேடர் மீனவர். உழவர், ஆயர் என்பனபோலும் விலங்கினம் தொடர்பான நாகரீகம், இயல்பு மாறாச் சமுதாய நிலைகளில் இடங்கொண்டுவிட்டது. ஆகவே, கடலைச் சார்ந்த நாடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த பழங்குடியினர், திராவிடர்க்கு முந்தியவராவர் எனக் கொள்வது கூடாது. அதேபோல், மத்தியதரைக் கடற் பகுதியிலும், அர்மீனிய நாட்டிலும் வாழ்ந்தவர் திராவிடர்க்கு முந்திய மூதாதையர் எனக் கொள்வதும் கூடாது. ஆகவே சிந்து கங்கைச் சமவெளிகள், முறையாக உருவாகாத காலத்தில், தென் இந்தியாவையும், ஆப்பிரிக்காவையும் இணைத்து இருந்ததும், கடலுள் ஆழ்ந்து போனதும், திராவிடர்களின் தொடக்க கால வாழிடமும் ஆகிய, தென் இந்திய தீபகற்பத்தைத்தான் மத்திய தரைக்கடல் இனத்தவர் என அழைக்கப்படுவோர், தாங்கள் தோன்றிய இடமாகக் கொண்டிருந்தனர் என முடிவு செய்யலாம்; ஆகவே, திராவிட நாகரிகச் சாயலை இந்தியநாட்டு நாகரீகங்களில் மட்டுமே காணக்கூடியது அன்று. அதை கிரீட்டன் (Cretan), எஜியன் (Aegean) சுமேரியன் (Sumerian), பாபிலோனியன் (Babylonian) மற்றும் எகிப்தியன் (Egyptian) போலும் மேலை நாட்டு நாகரீகங்களிலும் இவை போலும் உலகின் பல்வேறு பழம்பெரும் நாகரீங்கங்களிலும் காணலாம். இம் முடிவில் மேலும் வலுவாக இருக்க, தென் இந்தியாவில் மேலும் பற்பல அகழ் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என நான் வாதிடுகின்றேன். திருவாளர்