பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

57



இப்போதும் நனிமிக அதிகமாக இரண்டறக் கலந்திருப்பதுபோல், திராவிட மொழிச் சொற்கள் பெருமளவில் இரண்டறக் கலந்திருந்தாலும் அதைத் (பிராகுவி மொழியை) திராவிட மொழிக் குடும்பமொழியாக, இன்னமும் கொள்வதாக இயலாத ஒன்றாம். இக்கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டப்படும், இரண்டாந்தரச் சான்றாகிய, சொற்களிடையே உள்ள ஒருமைப்பாடும் போதுமானதும் அன்று: ஏற்கக் கூடியதும் அன்று. தூய திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பெறப்பட்ட சொற்கள், நனிமிகக் குறைவு என்பது உண்மை; ஆனால், அவை, வளம்மிக்க சொற்களின் சிறுபான்மையினவே. அது, நனிமிக அடிப்படையான மூலத்தோடு ஒட்டிய கருத்துக்களை வெளிப்படுத்தவல்ல சொற்களால், முழுமையாக ஆக்கப்பட்டுள்ளது. வாய்,காது, கண், மூளை, இரத்தம், உறக்கம், முடி, அடி போலும் அடிப்படைச்சொற்கள்; பெரிய, சிறிய, புதிய, பழைய, இனிய, கசக்கும், உலர்ந்த, வெய்ய, சிவந்த என்பன போலும் பெயரெச்சச் சொற்கள்; நான், நீ, அவன், நாம், நீ, அவர், யார், எது, எத்தனை, மற்றவைபோலும் சுட்டுப்பெயர்கள் இரு, ஆகு, வா, கொடு, தின், பேசு, கேள், பார், உணர், எடு, அடி, அஞ்சு, இற என்பன போலும் வினைச்சொற்கள்; முன்னர் பின்னர், இனியும் இன்று என்பன போலும் வினையெச்சங்கள் (The Brahuilanguage Part II, P. 16).

15) திருவாளர் ஜி.ஆர். ஹண்டர் (G.R Hunter) அவர்களின் அரப்பா மற்றும் மொகஞ்சொதாரோ எழுத்துக்களும், அவை, பிறமொழி எழுத்துக்களோடு கொண்டுள்ள உறவும் (Thescript of Harappan and Mohenjodaro and its connection with other script) என்ற நூலைக் காண்க. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் ஓவிய வடிவு எழுத்துக்களால் ஆன கல்வெட்டுக்கள் காணப்பட்டன. இவைபோலும் எழுத்துமுறை,