பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

77


தென்இந்திய வாணிகம், மீண்டும் அராபியர் கைக்கு மாறிவிட்டது. போர்த்துகல் நாட்டவரும், அந்நாட்டுக் கடலோடியுமாகிய மார்க்கபோலோ அவர்கள் காலம் வரை, இந்தியப் பெருங்கடல்களில் கப்பலோட்டத்தை அரேபியர்களே தொடர்ந்து மேற்கொண்டனர்.

இந்த வாணிபங்களெல்லாம் முக்கியமாக, மேற்குக் கரையைச் சேர்ந்ததாக, அதற்கு ஈடான, வாணிகம், அதனினும் அதிகமாகப் பெரும்பாலும் பண்டைக்காலத்தில், இலங்கை வழியாகவும், பிற்காலத்தே நேரிடையாகவும், பசிபிக்கடல் தீவுகளாகிய, ஆர்ச்சிபெலகோ (Archipelago) பொலனீஷியா (Polynesia) மற்றும் மலேசியா (Malaysia) ஆகிய நாடுகளோடு இருந்தது. இத்தொடர்புகள் எல்லாம், இயல்பாகவே, இந்தியத் தீபகற்பத்தின், அதாவது தென்னிந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்குக் கடற்ரைகளில் இருந்து ஆகும். இப்போக்குவரத்துக்கள், ஆசியாவின் மற்றப் பகுதிகள், ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவோடு கொண்டிருந்த போக்குவரத்துக்கள் போலவே பண்பாடு பற்றியதும், வாணிகம் பற்றியதும் ஆம். திருவாளர் பி.டி.எஸ் அவர்களின் “இந்தியாவில் கற்காலம்” (Stone Age in India), (பக்கம். 43) காண்க.

நம் ஆய்வைச் சிறிதுகாலம்வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டிய வாணிகத்திலேயே வரையறுத்துக் கொண்டு நோக்கின், வாணிகம் மற்றும் ஏனைய போக்குவரத்துக்கள், பழங்காலம் தொட்டே பெருமளவில் இருந்தன. இலங்கை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், மற்றும் பொதுவாகப் பசிப்பிக்கடல் தீவுகளில், தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒற்றைப் பாய்மரக்கப்பல்களைப்போல் அல்லாமல், இரட்டைப் பாய்மரக்கப்பல்களை உடைய பொலினீஷியாவோடு வாணிகத் தொடர்பு இருந்தது. ஆந்திரர் மற்றும் குறும்பர்களின் பழங்கால்