பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தமிழர் நாட்டுப் பாடல்கள் ______________________________

நீ நடந்து வா பாலகனே! உன் தடம் நான் பார்க்க ஐந்து தலையாண்டி, ஆறு முக வேலாண்டி பிச்சைக்கு வந்தாண்டி, பிள்ளைக்கலி தீர்த்தாண்டி மலட்டு ஆறு பெருகிவர, மாதுளையே பூ சொரிய புரட்டாசி மாத்தையிலே பொன் பெட்டகம் போல் வந்தவனோ! தாழை ஒரு மடலோ, உன் தாயாருக்கோ ஒரு மகனோ! தாழை மடல் ஒலை கொண்டு தமிழ் படிக்க வந்தவனோ! மானா மதுரை விட்டு தங்கை மீனாளுக்கு மதுரையிலே பாதி விட்டு தல்லா குளம் தரவில்லைண்ணு தங்கை மீனா சாய்த்தாள் திருமுகத்தை.

சேகரித்தவர்: குமாரி பி.சொரனம்

  இடம்

சிவகிரி,நெல்லை மாவட்டம்.

  காது குத்தக் காணிக்கை
குழந்தைக்குக் காது குத்தப் போகிறார்கள். அதற்கு மாமன் என்ன சீர் கொண்டு வருவான் என்று தாய் அனுமானம் செய்து பார்க்கிறாள்.
ஆசாரியை அழைத்துக் காதுக்குக் கடுக்கண் செய்யச் சொல்லுகிறாள்.
தோழியரை அழைத்துப் பாலனுக்குக் கண்திருஷ்டி வராமல் திருஷ்டி சுற்றச் சொல்லுகிறாள்.

பிறர், குழந்தையின் அழகைக் கண்டு ரசித்து விட்டால் அதற்கு நோய் வரும் என்று தமிழ்த் தாய்மார்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை புராதன மந்திரவாதத்தின் அடிப்படையில் எழுந்தது. சில கண்களுக்குத் தீமையை விளைவிக்கும் சக்தியுண்டென்பது மந்திரவாதக் கருத்து. கண்பட்டால் நோய் நொடி வரும் என்பது நம்பிக்கை,