பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 தமிழர் நாட்டுப் பாடல்கள் அடிச்சிட்டுப் போகச் சொல்லுகொப்பன் மவணை; வட்டார வழக்கு: வ ச்சுக்கிட்டேன்-தின்றுவிட்டேன்; வயித்தன்-வயிற்றான் (வயிறு உடையவன்); கொப்பன்உங்கள் அப்பன். சேகரித்தவர். இடம்: S. சடையப்பன் அரூா வட-மி, தர்மபுரி மாவட்டம். கண்ணாமூச்சி இவ்விளையாட்டிற்குத் தலைவன் ஒருவன் வேண்டும். அவனை "தாச்சி" என்று அழைப்பார்கள். சில சிறுவர்களில் ஒருவனைத் தேர்ந்தேடுத்து அவன் கண்களிரண்டையும் தாச்சி பொத்திக் கொள்வான். மற்றவர்கள் ஒடிச் சென்று ஒளிந்து கொள்வார்கள். எல்லோரும் ஒளிந்து கொண்டபின் தலைவன் கண்களைத் திறந்துவிடுவான். அவன் தேடிச் சென்று யாரையா வது தொடவேண்டும், அதற்குள் ஒளிந்து கொண்டவர்கள் ஓடிவந்து தலைவனைத் தொடவேண்டும். எல்லோரும் தொட்டு விட்டால் தேடிச் சென்றவனே மறுபடி கண்களைப் பொத்திக் கொள்ள வேண்டும். இவ்விளையாட்டில் முதலில் கண்னைப் பொத்திக் கொள்வதற்கு யாரும் இணங்க மாட்டார்கள். முதலில் யார் பொத்திக் கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒரு வழி கையாளப்படுகிறது. தாச்சி எல்லோரையும் வரிசையாக நிறுத்துவான் ஒரு பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்து ஆளுக்கு ஒரு சொல் வீதம் சொல்லி, தொட்டுக் கொண்டு வருவான். பாட்டின் கடைசிச் சொல் வந்ததும் யாரை அவன் தொடுகிறானோ, அவன் விலகிக் கொள்வான். மீண்டும் பாட்டைச் சொல்லி முன் போலவே ஒவ்வொருவராகத் தொட்டு வருவான். இவ்வாறாகக் கடைசியாக மீதமிருப்பவன் கண்க ளைப் பொத்திக் கொள்ள வேண்டும். அப்பாட்டின் ஒரு பகுதி கீழே கொடுக்கப்படுகிறது. கண்ணைக் கட்டவேண்டியவனை வேறொரு முறையிலும் தேர்ந்தெடுப்பதுண்டு. பலர் வட்டமாக உட்கார்ந்து கொள்வர். அவர்கள் ஒரு கையைத் தலைமேல் வைத்துக் கொள்வர். விளையாட்டுத் தலைவன் ஒரு பாட்டின் சொற்றொடர்களைச் சொல்லிக்கொண்டே தொட்டுக் கொண்டு வருவான். கடைசியில்