பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டு 125 கையெடு" என்று சொல்லிக் கொண்டு யாரைத் தொடுகிறானோ அவன் விலகிக்கொள்வான். கடைசியில் ஒருவன் மீதம் இருக்கும் வரை இது நடைபெறும். மீதமிருப்பவன் விலகியவர்கள் ஒவ்வொருவருடைய கையையும், பிடித்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு சுடுகிறது, சுடுகிறது என்று சொல்வான். யாராவது ஒருவனுடைய கையைக் கன்னத்தில் வைத்துக் கொள்ளும் போது குளிர்கிறது. என்று சொல்வான். அவன்தான் கண்ணைப் பொத்திக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பாடல்களும் கீழே தரப்பட்டுள்ளன. (குறிப்புரை S.S. போத்தையார் பச்சத் தவக்காட பளபளங்க பழனி பச்சான்-மினு மினுங்க செங்கரட்டி-சிவத்தப்பிள்ளை கிண்ணா வந்தான்-கினுக்கட்டி உடும்பு-துடுப்பு பால்-பறங்கி எட்டுமன்-குட்டுமன்-ஜல் ஒருப்பத்தி-இருப்பத்தி ஒரிய-மங்கலம் சீப்பு-சினுக்கவலி உங்கையா-பேரன்ன? முருக்கந் தண்டு-திண்ணவரே, முள்ளிச் சாறு-குடிச்சவரே தார் தார்-வாழைக்காய் தாமரைக் குத்தி-வாழைக்காய் புதுப் புது மண்டபம் பூமா தேவி கையெடு சேகரித்தவர்: இடம்: S.S. போத்தையா நெல்லை மாவட்டம். சிறுவர் பாடல்கள் குழந்தைக்குப் பேச்சுக் கற்றுக் கொடுப்பதற்குச் சில எளிய சொற்களைச் சேர்த்துப் பாடும் பாடல்கள் ஒருவகை. இவற்றைப் பிறர் பாட, குழந்தைகள் திருப்பிச் சொல்வார்கள். A 5 i 9 - 9