பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 தமிழர் நாட்டுப் பாடல்கள் தமிழ் நாட்டில் பலவகையான குழந்தை விளையாட்டுகள் உள்ளன. ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு பாட்டு உண்டு. இவற்றில் கோஷ்டி விளையாட்டுக்களில் ஒரு கோஷ்டியார் ஒரு பாட்டைப் பாட, எதிர் கோஷ்டியார் அதற்குப் பதில் பாட்டுப் பாடுவார்கள். இத்தகைய பாடல்களில் சடு குடு, கழங்கு முதலியவற்றை தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்களில் சேர்த்துள்ளோம். இப் பகுதியில் மேலும் சில பாடல்களை வெளியிடுகிறோம். இவற்றில் பொருளை விட சந்தப் பயிற்சியும், சொற்பயிற்சியுமே முக்கியமாகக் காணப்படுகிறது. சடு குடு உடற் பயிற்சிக்கும், சுவாசப் பயிற்சிக்கும், இவ் விளை யாட்டு மிகவும் சிறந்தது. இதனை விளையாடும் முறை அனைவருக்கும் தெரியும். எதிர்கட்சிக்குள் உப்பைத் தாண்டிச் செல்லும் சிறுவன் சடு குடுப் பாடலைப் பாடிக் கொண்டே செல்வான். இப்பாடல் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். இரண்டு பாடல்கள் இத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. நான்தான் வீரன் நல்ல முத்து பேரன் வெள்ளிப் பிரம்பு எடுத்து விளையாட வாரேண்டா தங்கப் பிரம்பு எடுத்து தாலிகட்ட வாரேண்டா, வாரேண்டா, குடு குடு சல்லி குப்பன் சல்லி ரவ்வாச் சல்லி வேத்து வடியும் சாராயம் காத்து இருந்து பூசை பண்ணும் காவடிப் பண்டாரம் சடு குடு என்பது சாட்டை என்பது மேட்டுப் பத்திரி முத்தையா நாடான் செத்துக் கிடக்கான்