பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 தமிழர் நாட்டுப் பாடல்கள் உச்சரிப்பு விளையாட்டுக்கள் உச்சரிப்புத் திருந்துவதற்காகச் சில வாக்கியங்களை விரைவா கச் சொல்லிப் பழகவேண்டும். அவற்றுள் 'ர', 'ற' கரங்களும், ன, ண கரங்களும், ல, ள, ழ கரங்களும் விரவி வரும். விரைவாகவும் சரியாகவும் அவ் வாக்கியங்களைச் சொன்னால் உச்சரிப்பு திருந்தும். ஒடுகிற நரியிலே ஒரு நரி சிறுநரி, சிறு நரி முதுகிலே ஒரு பிடி நரை மயிர் (திரும்பத் திரும்ப) கடலலையிலே ஒரு உரல் உருளுது, பெரளுது தத்தளிக்குது, தாளம் போடுது சேகரித்தவர்: இடம்: S.S. போத்தையா தங்கம்மாள்புரம், விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.