பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டு 429 சாதி சனமெல்லாம் பெண்ணுண்டோ? சம்பந்த வழியெல்லாம் பெண்ணுண்டோ? பதில்: குச்சி குச்சி ராக்கம்மா பெண்ணில்லை கூசாலி ராக்கம்மா பெண்ணில்லை சாதிசனமெல்லாம் பெண்ணில்லை சம்பந்த வழியெல்லாம் பெண்ணில்லை கேள்வி: குச்சி குச்சி ராக்கம்மா நூறு ரூபாய் கூசாலி ராக்கம்மா நூறு ரூபாய் சாதிசனமெல்லாம் நூறு ரூபாய் சம்பந்த வழியெல்லாம் நூறு ரூபாய் பதில்: குச்சி குச்சி ராக்கம்மா அது வேண்டாம் கூசாலி ராக்கம்மா அது வேண்டாம் சாதி சனமெல்லாம் அது வேண்டாம் சம்பந்த வழியெல்லாம் அது வேண்டாம் குறிப்பு: இப்படியே, சாயச்சேலை”, “சரிப்பளி என்று பலபொருள்களையும் சொல்லிப் பெண் கேட்பார்கள். எதிர்க்கட்சியினர் வேண்டாம், வேண்டாம் என்பார்கள். சேகரித்தவர்: இடம்: S.S. போத்தையா தங்கம்மாள்புரம், விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.