பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 தமிழர் நாட்டுப் பாடல்கள் விளையாட்டு ஆடும்-ஓநாயும் வரியைாக ஒருவன் இடுப்பை மற்றவன் பிடித்தபடி சிறுவர்கள் நிற்பார்கள். இவர்கள் ஆடுகள். ஒருவன் மட்டும் சுற்றிவந்து கூட்டத்திலிருந்து பிரிபவனைப் பிடிக்க முயலுவான். அவன் ஓநாய். ஆடுகளும், ஓநாயும் பாட்டுப் பாடிக் கொண்டே விளையாடும் இந்தப் பாடல் விளாத்திகுளம் பகுதியில் பாடப்படுவது. ஒநாய் என்னாட்டைக் காணோமே ஆடு: தேடிப் பிடிச்சுக்கோ ஒநாய்: அடுப்பு மேலே ஏறுவேன் ஆடு: துடுப்பைக் கொண்டு சாத்துவேன் ஒநாய் நெல்லைக் கொறிப்பேன் ஆடு: பல்லை உடைப்பேன் ஒநாய்: வடிதண்ணியைக் கொட்டுவேன் ஆடு: வழிச்சு வழிச்சு நக்கிக்கோ ஒநாய்: கோட்டை மேலே ஏறுவேன் கொள்ளி கொண்டு சாத்துவேன் ஒநாய் என்னாட்டைக் காணோமே?

தேடிப் பிடிச்சுக்கோ.

சேகரித்தவர்: இடம்: 8.S. போத்தையா விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம். குச்சி குச்சி ராக்கம்மா இரண்டு பக்கங்களிலும் இரண்டிரண்டு பெண்கள், கையைத் தோளின்மேல் போட்டுக் கொண்டு நிற்பார்கள். ஒருபக்கத்திலுள்ள கட்சியார் கேள்வி கேட்பார்கள். மற்றொரு பக்கத்திலுள்ளவர்கள் பதிலுரைப்பார்கள். கேள்வி: குச்சிக் குச்சி ராக்கம்மா பெண்ணுண்டோ? கூடசாலி ராக்கம்மா பெண்ணுண்டோ?