பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காதல் 49 தெற்குத் தெருவிலே தெல் தெறிக்கும் புள்ளையாண்டா ஒடித் திரியாதய ஒங்க மேல துரசு படும் சாய வேட்டி கட்டாதிய-ஒங்க சதிரத்துக்கோ நல்லால்லே வெள்ளை வேட்டி கட்டி வாங்க வெளுப்பாருந்தா நல்லாருக்கும் கந்தை வேட்டி கட்டாதிய கடைக் கெதுக்கே நிக்காதிய மல்லு வேட்டி வாங்கித் தாரேன் மெல்லுதமா கட்டி வாங்க நீல வர்ணப் பொட்டுக்காரா நிறத்துக் கேத்த சட்டைக்காரா கண்ணாடி வேண்டாமய்யா தன்னழகே போது மையா ஆசை வச்சேன் ஒங்க மேல ஆளான மாசி மாசம் பேச நல்ல ஆசை ஐயா பிறருக்கிடம் வையாதிய சாய வேட்டி கட்டாதிய சாயலுல பாராதிய மல்லு வேட்டி வாங்கித்தாரேன் மற்ற முகம் பாராதிய முக்குல நில்லாதிய முழி சுருட்டிப் பாராதிய கத்தி யுமுள்ள வுக சூதாக எண்ணுவாக கொல்லையிலே நில்லாதிய கொடி அரளி சூடாதிய மதி லெட்டிப் பாராதிய மதினி வார நேரமாச்சு ஒத்த வேட்டி கட்டாதிய உதறி நடக்காதிய பரக்க முழியாதிய பழகின எங்க போவா?