பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
151

காதல்

விடவும் மனம் கூடுதில்லை காத்தடிச்சுத் தாழை பூக்க
காத வழி பூ மணக்க
பூவார வாசத்துல
போக மனம் கூடுதில்லை
சுத்திச் சிவப்புக்கல்லு
சூழ் நடுவே வெள்ளைக்கல்லு வெள்ளைக் கல்லும் பாவனையும் வெறுக்க மனம் கூடுதில்லை தெற்கத்திக் கும்பாவாம் திருநெல்வேலி வெங்கலமாம் மதுரைச் சர விளக்கை
மறக்க மனம் கூடுதில்லை ஆருக்கு ஆளானேன் ஆவரைக்குப் பூவானேன் வேம்புக்கு நிழலானேன் வெறுக்குதில்லை உங்க ஆசை கம்பம் பூவே கமுகம் பூவே காத்தடிச்சா உதிரும் பூவே மாதுளம் பூ என் கனியை
மறக்க மனம் கூடுதில்லை
கம்மங் கருதிருக்க
கருத்தூரணி தண்ணிருக்க
புங்க நிழலிருக்க
போக மனம் கூடுதில்லை

வட்டார வழக்கு: கும்பா-சரவிளக்கு.

சேகரித்தவர்: இடம்:


S.S.போத்தையா விளாத்திகுளம் பகுதி, திருநெல்வேலி.


ஆளுக்கொரு தேசமானோம்

பஞ்ச காலத்தில், வேலை தேடித் தேயிலைத் தோட்டத்திற்கு ஒரு இளைஞன் சென்றான். மழை பெய்து பயிர் செய்யும் காலம் வந்ததும் திரும்புகிறேன் என்று சொல்லிச் சென்றான். மழை வந்தது. புஞ்சைக்காட்டு வேலைகளும் தொடங்கி விட்டன. அவள் அவனது வாக்குறுதியை எண்ணி வருந்துகிறாள்.