பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

தமிழர் நாட்டுப் பாடல்கள்


கழுகு மலைக் குருவி குளம் கண்டெடுத்தேன் குண்டு முத்து குண்டுமுத்தைக் காணாமல் சுண்டுதனே கண்ணிரை வேப்பம்பூ பூராதோ
விடிந்தால் மலராதோ
நேற்று வந்த நேசருக்கு
நேரத் தெரியாதோ!
வேம்பு தளுக்காதோ
வீசுங் கொம்பு ஓடாதோ!
வீசுங் கொம்பு மேலிருந்து வெள்ளை தெரியாதோ
எலுமிச்சம் பழம் போல இருபேரும் ஒரு வயது
யாரு செய்த தீவினையோ ஆளுக்கொரு தேசமானோம்.

வட்டார வழக்கு: சுண்டுதனே-சுண்டுகிறேனே; பூராதோ -பூக்காதோ, தளுக்காதோ-தளிர்க்காதோ,

சேகரித்தவர்: இடம்:


S.S.போத்தையா நெல்லை மாவட்டம்.


நெருப்புத் தணலாகுதடா!

பிரிந்திருக்கும் காதலி காதலனைச் சேரும் காலத்தை எண்ணி ஏங்குகிறாள். இப்பாடலில் அடுக்கடுக்காக உவமைகள் வருகின் றன; இவையாவும் உழவர் வாழ்க்கையிலிருந்து எடுத்தாளப் பட்டவை.

மதுரை மரிக் கொழுந்தே மணலுறு தாழம் பூவே
சிவ கெங்கைப் பன்னீரே சேருறது எந்தக் காலம்
கட்டிலுச் சட்டம் போல
கடைஞ் செடுத்த விட்டம் போல உத்திரத்துத் துணு போல
முத்து இருந்து வாடுறனே!
ஆசை மனம் கூசுதையா