பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153

காதல்


அம்புருவிப் பாயுதையா!
நேச மனம் நெஞ்சினிலே நெருப்புத் தணலாகுதடா
ஏக்கம் பிடிக்குதையா!
என்னுகரு போகுதையா!
துக்கம் குறைஞ்சதையா துரைமகனைக் காணாமல்
நிறை குடத்துத் தண்ணிபோல நிழலாடும் என் சதுரம்
குறை குடத்துத் தண்ணீராய் குறைஞ்சதய்யா உன்னாலே

குறிப்பு: முத்து இருந்து -தன் பெயரையே குறிப்பிடுகிறாள்.

சேகரித்தவர்: இடம்:


S.S போத்தையா நெல்லை மாவட்டம்.


கிளியம்மா

சில நாள் பிரிவுக்குப் பின்னர் ஒருவன் தன் காதலியைக் காணுகிறான். ஆசை மேலீட்டால் என்னென்னவோ பிதற்றுகி றான். அப்பிதற்றுதலில் எழுந்த பாடல் தான் இது.

கன்னங் கருத்த புள்ளே
கை மோதிரம் தோத்த புள்ளே உள்ளங்கைத் தேனா
உருகாண்டி உன்னாலே இடியிடித்து மழை பொழிய இருண்ட வெள்ளம் திரண்டுவர குடை பிடித்து தான் வருவேன் குயிலானே துரங்கிடாதே
ஒட்டைக் கரண்ட கமாம் ஒசையிடும் வெண்கலமாம்-உன் காட்டு மரிக் கொளுந்தை-கொஞ்சம்
காட்டி விட்டா லாகாதா? ஆலமரத்தைப் பாரு
அடிமரத்து வேரப்பாரு
குண்டஞ் சம்பா நெல்லப்-பாரு புள்ள கிளியம்மா
குட்டிபோர சோக்கப் பாரு