பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

தமிழர் நாட்டுப் பாடல்கள்


போடு தின்னாக்கு
ஆத்துக்கு அந்தாண்ட அத்தைமகள் ரெண்டு பேரு கொட்ட மரம் வெட்டயிலே-
புள்ள கிளியம்மா
போட்டாண்டி பொட்டுத்தாலி-
போடு தின்னாக்கு
வட்ட வட்டப் பாறையிலே
வர கரிசித் தீட்டயிலே
ஆர் கொடுத்த சாயச் சீலே
புள்ளக் கிளியம்மா
ஆலவட்டம் போடுதடி-
போடு தின்னாக்கு
கூடமேலே கூட வச்சு கோயிலுக்கு போர பொண்னே கூடை அரங் பணமா?-உன் கொண்டப் பூ, காப்பணமா?
சட்டி மேலே சட்டி வச்சு சந்தைக்குப் போரப் புள்ளே
சட்டி அரப்பணமா?-உன் சாமந்திப்பூ காப்பணமா?

வட்டார வழக்கு: தோத்த-தோற்ற, வேரப்பாருவேரைப்பாரு, அந்தாண்ட-அந்தப் பக்கம்; பத்துலன்னுபற்றவில்லை என்று; வெளுக்கரண்டி-உதைக்கிராண்டி.

உதவியவர்: இடம்:


சந்திரன் வாழப்பாடி, சேலம் மாவட்டம்.


காதலியைக் கொன்ற தகப்பன்

மலையோரங்களில் தோட்டங்கள் உள்ள வெள்ளாமையைக் காட்டுப் பன்றி, காட்டெருமை முதலிய மிருகங்கள் நாசம் செய்யாவண்ணம் காக்க, கண்ணி வைத்தல், அம்பு எய்தலும் உண்டு. அப்படி மலையோரம் உள்ள தோட்டத்தில் ஒரு இளைஞன் காவல் காத்து வந்தான். அவன் தினமும் இரவு வேளையில் தனது காதலியைச் சந்திக்க மகுடி வாசிப்பான். அவளும் அவனைத் தேடிவந்து கூடிய பின்னர் திரும்புவாள். மகுடிச் சத்தம் இல்லையேல் அவள் வரமாட்டமாள்.