பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒருநாள் தன் தகப்பனின் உத்தரவுப்படி அவன் வேற்றுாருக் குச் சென்றான். செல்லும் பொழுது மகுடியை வேறு யாரும் ஊதாமலிருக்க அதை உடைத்து வைத்து விட்டுச் சென்றான். அன்று இரவு கொல்லைக்கு வந்த அவன் தகப்பன் யாரோ போக்கிரிகள் அதை உடைத்து விட்டதாக எண்ணி ஒட்டவைத்து ஊதினான். இச்சத்தத்தைக் கேட்டதும் அவன் காதலி தன் காதலன் மகுடி வாசிப்பதாக எண்ணி அங்கு வருகிறாள். அப்பொழுது அவன் தகப்பன் யாரோ திருடன் என எண்ணி அவள் மீது அம்பு விடுகிறான். அவள் சத்தமிட்டபடி கீழே விழுகிறாள். அவள் அருகில் வந்ததும் விஷயத்தைப் புரிந்து கொள்கிறான். மறுநாள் அவள் காதலன் அங்கு வந்து பார்த்துப் புலம்புகிறான். தகப்பனைத் திட்டுகிறான். தகப்பனும் தான் தெரியாமல் செய்ததாக வருந்துகிறான். இச்சம்பவத்தை விவரிப்ப துதான் இந்தப் பாடல்கள்.

காதலன்:

மழையா கருக்கலாடி
மாமயிலே பெண்ணரசே
வழி தேடி வந்தே

காதலி:

அத்தி நார்ப் பட்டெடுத்து
அழகு கன்னிப் பால் பிடித்து உன்னிலும் உன்னிதமாய் ஊதினார் உன் தகப்பன்

மகன்:

சாதா குருடா
சண்டாளா என் தகப்பா
சந்தன மாமரத்தை
தாளுருவக் கொல்ல லாமா?

தகப்பன்:

உன்னானை என்னானை
உன் தேவின்னு நானறியேன் காவலை அழிக்க வந்த கள்ளன்னு அம்பு போட்டேன்

பக்கத்துக் கிராமங்களில் தகப்பனுக்கும் மகனுக்கும் நடக்கும் விவாதங்கள் வேறு உருவத்தில் பாடலாகப் பாடப்படு கிறது. அதையும் பார்ப்போம்.

மகன்:

மழைக்கால் இறங்கி
மாமழை மின்னல் மின்ன