பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தமிழர் நாட்டுப் பாடல்கள்


சாதா குருடா
சண்டாளா என் தகப்பா
ஒரக் கண்ணா உனக்கு
ஒரு கண்ணும் நொள்ளையா
காவல் பறி போகுதின்னு:-என் காதலியே கொன்னாயா?

இதைக் கேட்டதும் அருகில் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த அவன் காதலி கூறுகிறாள்.

காதலி:

சீந்திக் கொடி பிடுங்கி
சீலப் பேன் மெழுகடைத்து உன்னிலும் உன்னிதமாய் ஊதினார் உன் தகப்பன்.

வட்டார வழக்கு: உன்னிதமாய்-உன்னதமாய்: கள்ளன்னு -கள்ளன் என்று.

குறிப்பு: சீலைப்பேன் மெழுகு நிறம் இருக்கும். இறுகிய மெழுகு மேலே ஒட்டுவது போல் அது ஒட்டிக்கொள்ளும், இது ஒரு சிறுகதைப்பாடல்.

உதவியவர்: இடம்:


சந்திரன் வாழப்பாடி, சேலம் மாவட்டம்


கூப்பிட்டது கேட்கலியா?

அவள் குளித்து விட்டு சோலையில் மயிர் உலர்த்திக் கொண்டிருந்தாள்; அப்பொழுது அவள் காதலன் கோபுரத்தின் மேலேறிக் கூப்பிடுகிறான். அதற்கு அவள் பேசவில்லை. பிறகு அவள் அருகில் சென்று தான் கூப்பிட்டதிற்கு ஏன் பேசவில்லை எனக் கேட்கிறான். அதற்கு அவள் நீங்களா கூப்பிட்டீர்கள். அத்தச் சத்தம் குயில் சத்தம் என்றல்லவா இருந்தேன் என்று சொல்லுகிறாள்.

(குறிப்புரை-T. மங்கை)

காதலன்:

மாமரத்து சோலைக்குள்ளே
மயிருணத்தும் குள்ளப் பெண்ணே கோபுரத்து மேலேறி கூப்பிட்ட சச்சம் கேக்கலியா?