பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
157

காதல்


காதலி:

கூப்பிட்ட சச்ச மெல்லாம் குயிலுன்னு நானிருந்தேன் ஆளுச் சச்ச மின்னிருந்தா அச்சணமே வந்திருப்பே

வட்டார வழக்கு: சச்சம்-சத்தம்; அச்சணமே-அக்கணமே.

உதவியவர்: இடம்:


சந்திரன் வாழப்பாடி, சேலம் மாவட்டம்.


காத்திருந்து வீணாச்சு!

அவர்கள் உறவு சிறு வயது சேர்க்கையில் பிணைக்கப்பட் டது. இருந்தாலும், அவள் இன்று வேறொருவனுக்கு மனைவி, குடும்பத்தின் நிர்ப்பந்தத்தால் அவள் உரிமை இன்னொருவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும் அவள் உள்ளம் மட்டும் தனது காதலனிடமே குடிகொண்டிருந்தது.

தேங்காய் மூடியின் உள்பரப்புப் போன்ற பள்ளமான இடம். காதலர் களித்து மகிழ ஏற்ற இடம். வாய்க்கால் ஓடுகிறது. தண்ணீர் எடுக்க அவன் காதலி அங்கு தினம் வருவது வழக்கம். ஒருநாள் அவளை அவன் சந்திக்கிறான். அவன் பேரில் அவளுக்கு ஒரே ஆசை. மாற்றான் மனைவி என்னும் உரிமை அவனைத் தடுக்கிறது. இருந்தாலும் பழைய உறவு அவனை உசுப்புகிறது.

'தாகமாயிருக்கிறது. தண்ணீர் கிடைக்குமா?' என்று அவளைக் கேட்கிறான்.

அவனைப் போன்றே அவள் உள்ளத்திலும் போராட்டம். அவன் என்ன கேட்கிறான் என்பதை பார்வையின் மூலம் புரிந்து கொள்கிறாள். 'நீருண்டு, வீட்டுக்கு வந்தால் நல்ல தண்ணிர் கிடைக்கும்' என்று வீட்டின் அடையாளத்தைக் காட்டிவிட்டு சென்று விடுகிறாள்.

இரவு நேரம். அடையாளம் குறிப்பிட்ட தென்னை மரததடியில் அவன் வந்து அமர்ந்திருக்கின்றான். தனது வருகையை ஏதோ குறிப்பு மூலம் அவளுக்குத் தெரியப்படுத்துகி றான். A 519 - 1 }