பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



158

தமிழர் நாட்டுப் பாடல்கள்


அவளுக்கு என்ன செய்வதென்று புலப்படவில்லை. ஒரு பக்கம் தனது கள்ளக் காதலனை திருப்திப்படுத்த வேண்டும். மறுபுறம் அழும் குழந்தையையும், அடுப்பில் காயும் பாலையும் கவனிக்க வேண்டும். போதாக் குறைக்கு பாலகனைப் பெற்ற பாட்டனார் வேறு தூங்காமல் படுத்திருக்கிறார். தனது காதலனைச் சந்திக்க முடியுமென்ற நம்பிக்கையை இழக்கிறாள். குழந்தைக்குத் தாலாட்டுச் சொல்வது போல தான் வர முடியாத நிலையை உணர்த்துகிறாள்.

அவனுக்கு இதெல்லாம் காதில் விழவில்லை போலும் அவள் வரவை எதிர்பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கிறான். கிழக்கு வெளுத்தது. அவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. விரகதாபம் அவனை ஏது சொல்வதென்றே தெரியாமல் சொல்ல வைக்கிறது.

என்னவென்று?

காதலன்:

ஒடற ஒட்டத்திலே
ஒட்டாங் குச்சிப் பள்ளத்திலே கஞ்சாக் குடிக்கையிலே
கையூனி நிக்கையிலே
தங்கக் குடம் கொண்டு தண்ணிக்குப் போற பொண்ணே! தங்கக் கையினாலே
தண்ணி குடுத்தா ஆகாதோ?

காதலி:

வாய்க்காலுந் தண்ணியிலே
வண்டு வரும் தூசு வரும் குப்பத்துக்கு வந்திருந்தா
குளுந் தண்ணி நாத் தருவேன்

காதலன்:

வீடுந் தெரியாது
வாசலுந் தெரியாது

காதலி:

ஒரு பத்தாஞ் செட்டி விட்டோரம்
ரெண்டு தென்னம்புள்ளை அடையாளம்
அதுக் கடியில் உட்கார்ந்திரு நாவாரே
வந்தபின்னர்

காதலி:

பாலும் அடுப்பிலே தான்
பாலகனும் தொட்டிலிலே