பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153

காதல்


பாலகனைப் பெத்தெடுத்த பாட்டனாரும் கட்டிலிலே
போவச் சொன்னா பொல்லாப்பு நிக்கச் சொன்னா நிட்டுரம்

காதலன்:

கிழக்கு வெளுத்துப் போச்சு
கீழ் வானம் கூடிப் போச்சு கண்ணாத்தா வாசலிலே காத்திருந்து வீணாச்சு!

வட்டார வழக்கு: நாவாரே-நான் வாரேன்.

குறிப்பு: 'பாலகனைப் பெத்தெடுத்த பாட்டனாரும் கட்டிலிலே, இந்த அடியில் ஒரு சமூக உண்மை பொதிந்திருக்கி றது. கொங்கு நாட்டில் கடந்த இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரையிலும் தன் வீட்டுக்கு வரக்கூடிய மருமகளுக்கு மாமனார் தான் கணவனாக இருப்பான். கோவில் குளங்களுக்கோ, ஊர் சேதிகளுக்கே போவதானாலும், மாமனாரும், மருமகளும்தான் சேர்ந்து போவார்கள். இது சமூகத்தின் முன்னால் இழிவாகக் கருதப்பட்டதில்லை. ஒரு கெளரவமாகவே கருதப்பட்டு வந்தது. பொதுவாக கொங்கு வேளாளர் குடும்பங்களில் தந்தையை அண்ணன் என்றும், பாட்டனாரை அப்பன் என்றும் இந்தத் தலைமுறையில் கூட கூப்பிட்டு வருவது இதற்கு ஒரு சான்றாக அமையலாம். மருமகளை மாமனார் ஆண்டு வருவதை பின்தங்கிய கிராமங்களில் இன்னும் கூடப் பார்க்கலாம்.'

(குறிப்புரை - கு. சின்னப்பபாரதி)

உதவியவர்: இடம்:


பொன்னுசாமி ஒலப்பாளையம்.


புத்தி கெட்ட அண்ணா!

பெண்கள் பெரிய மனுசி (புஷ்பவதி) ஆனால் தீட்டுக் காலம் தாண்டும் வரையில், தங்குவதற்கென்று ஒரு பச்சைக் குடிசை கட்டுவார்கள். அந்தக் குடிசையை மாமன்மார்கள் கட்டிவைத்து அழித்து விடுவார்கள். வீட்டுக்கு அழைக்கும் போது சுற்றத்தாரையெல்லாம் அழைத்து விருந்து நடத்துவார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் 'எங்கள் வீட்டில் திருமணத்திற்குப் பெண் தயாராகி விட்டது" என்று வெளியாருக்கு சொல்லாமல் சொல்லித்.தெரிவிக்கப்படும்.