பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 463

தூது

காதலனைப் பிரிந்திருக்கும் காதலி கிளியையும், குயிலையும் மேகத்தையும் தூதனுப்புவது தமிழிலக்கிய மரபு. பார்ப்பானும், தோழனும், பாங்கியும், பாணனும் காதலர்களிடையே தூது செல்ல தகுதி வாய்ந்தவர்களென்று தொல்காப்பியம் கூறுகிறது. இம்மரபைப் பின்பற்றி நாட்டுப் பாடலிலும் தூது அனுப்புவது வாழ்க்கையின் மரபாகக் கருதப்படுகிறது.

ஓலை யெழுதி விட்டேன் ஒன்பதாளு தூதுவிட்டேன் சாடை எழுதி விட்டேன் சன்னக் கம்பி வேட்டியிலே அம்பார மேடையிலே அன்பு ஊஞ்சலாடயிலே யாரிட்ட சொல்லி விட அன்புள்ள துரை மகனே? ஓடுற தண்ணியிலே ஒரைச்சு விட்டேன் சந்தனத்தை சேர்ந்ததுவோ சேரலையோ செவத்தச் சாமி நெத்தியிலே

சேகரித்தவர்: S.S. போத்தையா இடம்: சூரன்குடி, விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.

கிளியம்மா

திருவிழாவுக்கு ஊரே திரண்டு போகிறது. ஒரு இளம் பெண், தனது காதலனுக்கு வழியில் கொடுப்பதற்கென்று பிட்டு வாங்கி மறைத்து வைத்திருந்தாள். அவன் ஆண்கள் கூட்டத்தில் சேர்ந்து போய்க் கொண்டிருந்தான். வழிநெடுக பிட்டைக் கொடுக்க முடியவில்லை. அவனுக்குக் கொடுக்காமல், தான் தின்னலாமா? அவளுடைய தோழி கிளியம்மாவுக்கு இது தெரியும். அவள் வேடிக்கையாகப் பிட்டைக் கேட்கிறாள். அப்பொழுது தனது கவலையை அவளுக்குத் தெரிவிக்கிறாள் காதலி.

ஆத்துல எடுத்த கல்லாம் புள்ளே கிளியம்மா