பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 தமிழர் நாட்டுப் பாடல்கள்

அழகா குழவிக்கல்லாம் புள்ளே கிளியம்மா மஞ்சள் ஒரைக்கும் கல்லாம் புள்ளே கிளியம்மா ஆசைக்குத்தான் புட்டு வாங்கி புள்ளே கிளியம்மா குடுக்கனெண்ணும் நானிருந்தேன் புள்ளே கிளியம்மா கூட்டத்திலே போறானடி புள்ளே கிளியம்மா குடுக்க முடியலியே புள்ளே கிளியம்மா.

பலவிதமானக் கல்லைக் குறிப்பிடுவது, ஒரு கல்லில் தனித்து உட்காரும்படி காதலனுக்குக் குறிப்பால் உணர்த்துவது. அவன் தனித்தால் பிட்டைக் கொடுத்து விடலாம் அல்லவா?

சேகரித்தவர்: சடையப்பன் இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.

இடம்

காதலர்கள் கணவன் மனைவியராகி விட்டனர். ஒரு நாள் ஊரையடுத்துள்ள ஓரிடத்துக்குப் போகிறார்கள். அங்கே அவர்களுடைய காதல் கேளிக்கைகளுக்குச் சாட்சியாகவிருந்த இடமும், மரங்களும் எதிர்ப்படுகின்றன. இருவரும் மகிழ்ச்சியோடு அவ்வி டங்களைப் பார்த்து பாடத் தொடங்குகிறார்கள். இன்று அவர்கள் இணைபிரியாத இல்லறத்தாராகி விட்டார்கள். ஆனால், அவர்களைப் பிணைத்து வைத்த தோட்டம் பாழாகக் கிடக்கிறது. அதன் கடமை முடிந்துவிட்டது. இனி அவர் வாழ்க்கையில் அந்த இடம் ஒரு புனித நினைவாக மட்டுமே எஞ்சி நிற்கும்.

கணவன்: பூசர மரத்துத் தோட்டம் பொன்னுங்கிளி பார்க்கும் தோட்டம் அன்னா தெரிவது பார் அன்னக் கிளி காக்கும் தோட்டம்

மனைவி: ஏழு புளிய மரம் எதிராகவே வேப்பமரம்