பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 165

சந்து புளிய மரம் சாமி வந்து நிற்கும் மரம்

இருவரும்: கூடி இருந்த இடம் கும்மச் சரம் போட்ட இடம் வாழப்பழம் தின்ன இடம் பாழாக் கிடக்குது பார்

வட்டார வழக்கு: பூசர மரம்-பூவரச மரம் (நெல்லைப் பேச்சு); பார்க்கும்-காவல் காக்கும்; கும்மச்சரம்-கும்மாளம்; அன்னா-அதோ.

சேகரித்தவர்: S.S. போத்தையா இடம்: விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.

அச்சு மட்டம்!

தீபாவளியன்று புதிது உடுத்தி முல்லைச்சரம் சூடி வெளியே வருகிறாள் பொன்னி. அவளின் முகம் காண வெளியே புத்தாடையணிந்து காத்திருக்கிறான். அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவனையும் தன்னையும் மனக்கண்ணில் சேர்த்து நிறுத்தி பொருத்தம் நோக்குகிறாள். அவள் முடிவு என்ன? கேளுங்கள்.

(பெண் பாடுவது)

கொண்டைக்கு ஒத்த கொல்லைப்பட்டி முல்லைச்சரம் அவருக்கு ஒத்த அச்சு மட்டம் நானலவோ? நாட்டுக்கு நாட்டு மட்டம் நாமரெண்டும் சோடி மட்டம் கோர்ட்டுக்குப் போனாலும் கோடி சனம் கையெடுக்கும் கருப்புக்கு ஏத்த கோயமுத்தூர் மல்பீசு அவருக்கு ஏத்த அச்சு மட்டம் நானல்லவோ?