பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

A 519 - 12 காதல் 173 புளிய இலை போல புள்ளித் தேமல் விழுந்தவரே அணை வாரு மில்லாமல் அழியுதையா உங்க தேமல் ஏடு படிச்ச வரை எழுத்தாணி தொட்டவரை பாரதம் படிச்சவரை பார்த்து வெகு நாளாச்சி முன்னங்கையில் தங்கக் காப்பு முகம் நெறஞ்ச அருப்பக்கட்டு காதவழி வந்தாலும் கைவிச்சில் நானறிவேன் அச்சடிப் புத்தகமே அரும் பரும்பாப் பேனாக் குச்சி பேனாக் குச்சி தொட்டெழுதும் பேர்ப் போன என் சாமி பல்லிலே இடை காவி பணத்திலே செலவாளி மேவரத்து நெல்லளக்க மெத்தச் செலவாளி ஒரு பாகம் தலைமுடியாம் ஒதுக்கி விட்ட புருவக் கட்டாம் புருவக் கட்டை நேர் பார்த்து பூசுமையா திரு நீற்றை இரும்படிச்சா கல கலங்கும் ஏலந் திண்ண வாய் மணக்கும் கரும்பு திண்ண வாயினிக்கும் கண்ணாளன் தந்த ஆசை ஈனாத வாழை போல இளவாழைக் கண்ணு போல காலையிலே காங்கலைண்ணா கண்ணு ரெண்டும் சோருதையா