பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் நாட்டுப் பாடல்கள் வந்தா வழி மணக்கும் வாச லெல்லாம் பூ மணக்கும் கட்டி அணைஞ்ச கையி எட்டு நாளும் பூமணக்கும் மதுரையிலே குதிரை வாங்கி மல்லிகைப் பூக் குஞ்சம் கட்டி அடித்து வரும் எம் பெருமான் ஆத்து மணல் தூள் பறக்க சிந்துதையா சீனிப் பொடி சிதறுதையா பூ மலரு அள்ளுதையா தன்னழகு ஆளோடி நிற்கும் போது அஞ்சு வயசிலேயே அழகு தேமல் விழுந்தவரே பற்றிப் படருதையா பச்சைக் கிளி தேகத்துலே நானும் நடந்திருப்பேன் நடப்பாரைக் கண்டிருப்பேன் அந்தச் சாமி நடையைப் போல சைகையிலே காணலியே மொச்சிச் செடியே நீங்க முழக்கமுள்ள தாமரையே பிச்சி மலர்க் கொடியை பிரிய மனம் கூடுதில்லை ஒத்தத் தட்டு வேட்டிகளாம் உல்லாசத் துண்டுகளம் பக்கத்துல நிக்கயிலே பத்துதையா என் மனசு பட்டு அரை ஞாண் கொடி பாவி மகன் வாயருமை விட்டிட்டி ருந்தாலும் வேறொருத்தி லாவிருவா