பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 175 குறுக்குச் சிறுத்தவரே கூத்தாடி மன்னவரே நாக்குத் திருத்தத்துக்கு நானுமில்ல ஆசை கொண்டேன் வந்திருவார் இந்த வழி வாச்சிருவார் தங்கக்கட்டி தந்திருவார் வெற்றிலையும் தயவு வார்த்தை சொல்லிடுவார் பச்சைக்கல்லு மேமுருகு பதினெட்டு வானப் பச்சை மலங்காட்டு மாசிப் பச்சை மணக்குதையா உங்க மேலே ஆல மரத்துக் கிளி ஆசாரம் பேசுங் கிளி நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் இந்த வழி கம்பி போட்ட வேட்டிக்காரா கம்பளத்துப் பிள்ளையாண்டா கடைக் கண்ணுப் புருவத்திற்கு கான மயில் ஆசை கொண்டேன் பல்லு விலை பெறுமே பணம் ஐந்து சொல் பெறுமே சொல்லு விலை பெறுமே சோலைக் கிளி வாய் திறந்தால் பூகம் பொடியுண்டு பொடியடைக்க கம்பியுண்டு நாசிப் பொடியுண்டு நான் இணங்குஞ் சாமியிட்ட புதன் கிழமை தலை முழுகி போக வரச் சிக்கெடுத்து கண்ணு ரெண்டும் சோரவிட்டு கடைக்கி மின்ன நிக்காக