பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 177 வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள திப்பிலிய சில்லுக் கருப்பட்டிய சினந்தாலும் மறப்பதில்லை உங்க உயரத்துக்கு உங்க காலு கெச்சத்துக்கு தங்கக் கைத்தானத்துக்கு தானாசை கொண்டனையா சாரட்டு வண்டியிலே சிகரெட்டுக் குடிக்கையிலே சிகரெட்டு வெளிச்சத்துலே தெரியுதையா உங்க முகம் எண்ணைத் தலையழகா எழுத்தாணி மூக்கழகா கோயில் சிலையழகா கொல்லுதடா உன்னாசை முழிக ரெண்டும் கிளியப் போல முளிப்புருவம் கத்தி போல உருட்டி முழிக்கையிலே ஊடுருவிப் பாயுதடா கல்லுரலு விதியிலே கனக ரட்ன மேடையிலே இன்பமுள்ள ரதிக்கிளியே இருங்களேன் சாவடியில் கடலாடிக் கடை துறந்து காரிக்கன் மல்லெடுத்து மெல்லுசமாப் போட்டுவரும் மிதந்த முளி நம்ம துரை மண் வெட்டி கொண்டு மடை திறக்கப் போற சாமி மடையைத் திறந்து விடும் மஞ்ச நீராடி வாரேன்