பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 179 மருவு படர்ந்த கிளி மனித ரோட பேசுங்கிளி தேமல் விழுந்த கிளி தினம் வருமாம் இந்த வழி எண்ணைத் தலை முழுகி என் தெருவில் போற மன்னா வண்ணத் தலை மயிரு கண்ணைப் பறிக்குதையா கட்டக் கம்பு கையிலெடுத்து காரணமா வார சாமி சினந்து வழி நடந்தா சிங்க முடி போலிருக்கும் வட்டார வழக்கு: லாவிருவா-சேர்த்துக் கொள்வாள். (பல பாடல்களின் தொகுப்பு) சேகரித்தவர்: இடம்: S.S. போத்தையா நெல்லை மாவட்டம். கணவன் பெருமை நாட்டுப் பாடல்களில் கணவனது பெருமையைப் பாடும் பாடல்கள் பல இருக்கின்றன. கணவன் செய்யும் தொழிலின் பெருமை, அவனது குணநலன்கள், உருவச் சிறப்பு, அறிவுக் கூர்மை, வாக்குவன்மை, தயாள குணம் முதலியவற்றைப் புகழ்ந்து மனைவி பாடுவாள். தன்னைக் கணவன் பாராட்டும் முறைகளையும், பெருமையாகக் குறிப்பிடுவாள். சாப்பிட்டுக் கைகழுவி சகுனம் பார்த்து நடை நடந்து நினைச்சா எடுப்பாக நெருஞ்சிப்பூ அச்சடியை சாத்துரு போவாக சவுளிக் கடை பாப்பாக நினைச்சா எடுப்பாக நெருஞ்சிப்பூ அச்சடியை