பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 எடுப்பாக, வட்டார வழக்கு: அச்சடி -அச்சுப் போவாக-எடுப்பார்கள், போவார்கள் தமிழர் நாட்டுப் பாடல்கள் சட்டை மேலே சட்டை போட்டு சரிகை குட்டை மேல போட்டு போராக எங்க மச்சான் பொழுதடைஞ்ச நேரத்துல கோர்ட்டாரு முன்பாக குரிச்சி போட்டுத் துரைகளோட வாதாடி வழக்குத் தீர்க்கும் வஞ்சிக் கொடி என் சாமி இருக்கக் குரிச்சி உண்டு எந்திரிக்கச் சோடு உண்டு நடக்கக் குடையு முண்டு நான் வணங்கும் சாமிக்கு எல்லோரும் பல் விளக்க ஆலங்குச்சி அத்திக்குச்சி அவரும் நானும் பல் விளக்க ரங்கத்துத் தங்கக் குச்சி போட்ட சேலை; (சிறப்பு பன்மை); குரிச்சி-நாற்காலி (அராபியச் சொல்); சோடுசெருப்பு, ரங்கம்-ரங்கூன். சேகரித்தவர்: S.S. போத்தையா காவல் கடுமை இடம்: நெல்லை மாவட்டம். காதலர்களின் உறவு காதலியின் பெற்றோர்களுக்குத் தெரிந்து விட்டது. அவளை வெளியில் விடாமல் காவல் காக்கிறார்கள். அவள் வெளியே சென்றாலும் யாராவது துணைக்குச் செல்லுகி றார்கள். காதலன் அவளைச் சந்திக்கச் சுற்றிச் சுற்றி வருகிறான். அவள் தனக்குத் தானே பாடுவது போல் அவனை நோக்கிப் பாடுகிறாள். லேஞ்சி வர்ணப் பூஞ்சிவப்பு நிழல்ல வந்து நிக்கி வீட்டுக் கொடுமையாலே வெளியேற நேரமில்ல