பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 181 காட்டானை கட்டியிருக்க கரடி புலி தானிருக்க ஏழண்ணமார் இருக்க எப்ப வந்த மன்னவனே? ஆண்: கட்டானைக் கண்ணக் கட்டி கரடி புலி வாயக் கட்டி ஏழண்ண மார் கண்ணயர ஏறி வந்தேன் கற்கோட்டை கருதோ ஒரு கருது காவலோ பத்து லட்சம் இந்த விதம் காவலில எந்த விதம் நான் வருவேன் ஆடியிருட்டுக்குள் அமாவாசைக் கம்மலில தேடி வருமுன்னே தெருவெல்லாம் காவலில்லா பெண்: தரும பட்டர ஓரத்துல சதிராடும் பொன்னுச்சாமி வீட்டுக் கொடுமையாலே வெளியே வர நீதியில்ல வட்டார வழக்கு: நிக்கி-நிற்கிறாங்க, எப்ப - எப்பொழுது; காவலில்லா-காவல் அல்லவா வந்த-வந்தாய்; கருது கதிர்; நீதி-நியதி. சேகரித்தவர்: இடம்: S.S. போத்தையா விளாத்திகுளம் வட்டம், நெல்லை மாவட்டம். விட்டானே ஒற்றை வழி கிராமப் பெண்களில் சிலர் காதலித்தவனால் கைவிடப்படுவ துமுண்டு. இதற்கு மிகவும் முக்கியமான காரணம் பணத்தோடு வேறு பெண் கிடைப்பதுதான். அவ்வாறு ஏமாற்றப்பட்டவள் ஏமாற்றியவனை வயிறெரிந்து சபிப்பாள். சமூகத்தில் சொத்துக்கு மதிப்பிருக்கும்வரை அவள் சாபம் அவனை என்ன செய்யும்? நெஞ்சில் குத்துவதுபோல் கூர்மையான சொல் பிரயோகங்களை இப்பாடல்களில் காணலாம்.